வட அமெரிக்கா

காப்பகம் ஒன்றில் குழந்தைகளை தூங்க வைப்பதற்காக ஊழியர் செய்த செயல்!

குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார்.

தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான Melatoninஐ, பிள்ளைகளுடைய பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளுக்கு கொடுத்ததாக அந்த நபர் மீது பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

குழந்தைகளை தூங்க வைப்பதற்காக காப்பக ஊழியர் செய்த செயல்: கனடாவில் பரபரப்பு | Nursery Worker Given Hormone Make Sleep Canada

குழந்தைகளின் பானத்தில் Melatonin கலக்கப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள குடும்பங்கள் நலத்துறை அமைச்சரான Suzanne Roy, தனது துறையும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது கற்பனை கூட செய்துபார்க்க இயலாத ஒரு சூழல் என்று கூறியுள்ள அமைச்சர், நமது குழந்தைகளின் நலனும் பாதுகாப்புமே முதன்மையானவை என்று கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content