செய்தி வட அமெரிக்கா

சரிந்த வங்கி கட்டமைப்பு – பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க வங்கிகள் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் பெரிய 11 வங்கிகள் இணைந்து சிக்கலில் சிக்கியிருக்கும் First Republic வங்கிக்கு 30 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன. Silicon Valley Bank, Signature Bank ஆகிய இரண்டு வங்கிகள் அண்மையில் முடங்கியது. இதனை அடுத்து அந்நாட்டின் பங்குச் சந்தையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தனியார் வங்கிச் சேவைகள், சொத்து நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபடும் First Republic வங்கி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அடிபடையானது. அதன் பங்கு விலைகள் 30 சதவீதம் சரிந்தன. வங்கியும் […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் சொத்து வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக செலவிட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, முன்னாள் மெக்சிகோ ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மெக்சிகோவில் உள்ள தமௌலிபாஸின் முன்னாள் ஆளுநரான 66 வயதான Tomás Yarrington Ruvalcaba, தெற்கு டெக்சாஸிற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனையைப் பெற்றார். நீதிபதி ரோலண்டோ ஓல்வேரா, டெக்சாஸின் கடலோர நகரமான போர்ட் இசபெல்லில் வாங்கிய காண்டோமினியத்தை ஒப்படைக்குமாறு முன்னாள் ஆளுநருக்கு உத்தரவிட்டார். அவர் அதிகபட்சமாக […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய போர் விமானம் அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கிய தருணம்!! வீடியோ வெளியானது

கருங்கடலில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று தனது ஆளில்லா விமானம் மீது மோதிய காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இரண்டு ரஷ்ய Su-27 ஜெட் விமானங்கள் MQ-9 ரீப்பருக்கு அருகில் பறந்தன, ஒன்று அதன் ப்ரொப்பல்லரைத் தாக்கியதுடன் அதை கடலில் வீழும்படி செய்தது. செவ்வாயன்று நடந்த சம்பவம், அருகிலுள்ள உக்ரைனில் சண்டை தொடர்வதால், வல்லரசுகளுக்கு இடையே நேரடி மோதலின் அபாயம் அதிகரித்து வருகிறது. காட்சிகளை வெளியிடுவதற்கான அமெரிக்காவின் முடிவைப் பாதுகாத்து, பிரிகேடியர் பாட் ரைடர், ரஷ்யர்களின் பொறுப்பற்ற […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் தமிழ் பெண் படுகொலை – வழக்கு விசாரணைகள் ஆரம்பம்

கனடாவில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழங்கு எதிர்வரும் 3ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி ஸ்காப்ரோவில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் மூவர் மீது முதல்நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதன்படி, உயிரிழந்த பெண்ணின் கணவர் மீதான விசாரணைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பணியின் போது பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டனில் வியாழன் அதிகாலை பணியின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க காவல்துறை அதிகாரிகள் தங்களைத் தாங்களே ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியின் போது கொல்லப்பட்ட செய்தி அந்த யதார்த்தத்தை நமக்கு நினைவூட்டுகிறது என்று ட்ரூடோ ட்வீட் செய்துள்ளார். பணியின் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

அமெரிக்காவில் 11 கருப்பினத்தவர்களை சுட்டுக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 14 அன்று, 18 வயதுடைய பெய்டன் ஜென்ட்ரான் என்ற நபர், முடிந்தவரை அதிகமான கறுப்பின மக்களைக் கொல்லும் நோக்கத்துடன், 200 மைல்களுக்கு (322 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான கான்க்ளினில் இருந்து காரில் சென்றார். பஃபேலோவில் உள்ள டாப்ஸ் ஃப்ரெண்ட்லி மார்க்கெட்டை குறிவைத்து பல மாதங்களாக ஜென்ட்ரான் தாக்குதலைத் திட்டமிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தன்மீதான குற்றச்சாட்டுக்களை பெய்டன் ஜென்ட்ரான் […]

செய்தி வட அமெரிக்கா

நான் ஜனாதிபதியாகத் தேர்வாகியிருந்தால் ரஷ்ய-உக்ரேன் போர் ஏற்பட்டிருக்காது என்கிறார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் புட்டினுடன் பேசி வெறுமனே 24 மணித்தியாலத்தில்  போரை நிறுத்தச்செய்வேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான் என்றும், அத்துடன் தான் ஜனாதிபதியாக  இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதனைக் கேட்பார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால்  அமெரிக்காவிற்கு […]

செய்தி வட அமெரிக்கா

TikTok செயலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரசாங்கம்!

TikTok செயலியை வைத்திருக்கும் சீன நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீன நிறுவனமான “பைட் டான்ஸ்” TikTok செயலியை வைத்துள்ளது. சீன நிறுவனம் TikTok செயலியை மற்றொரு சீன அல்லாத நிறுவனத்திற்கு விற்க வேண்டும், தவறினால் அமெரிக்காவில்TikTok தடை செய்யப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அத்தகைய கோரிக்கையை விடுத்ததை TikTok செயலி உறுதிப்படுத்தியது. இந்நிலையில் TikTok செயலியை பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தரவுகளை சீன நிறுவனம் வைத்திருப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தி வட அமெரிக்கா

கறுப்பானத்தவர் ஒவ்வொருவருக்கும் 5 மில்லியன் டொலர் இழப்பீடு -சான் பிரான்சிஸ்கோ திட்டம்!

இனவெறி மற்றும் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட கறுப்பின குடியிருப்பாளர்களுக்கு 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க சான் பிரான்சிஸ்கோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்க நகரமான சான் பிரான்சிசோ, அடிமைத்தனம் மற்றும் இனவெறியின் கொடூரமான மரபுக்கு இழப்பீடாக ஒவ்வொரு தகுதியுள்ள கறுப்பின குடிமகனுக்கும் $5 மில்லியன் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 168 கோடி) இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. சான் பிரான்சிசோ நகரத்தால் நியமிக்கப்பட்ட ஒரு இழப்பீட்டுக் குழு இந்த வார தொடக்கத்தில் இந்த இழப்பீட்டை பரிந்துரை செய்தது.அதுமட்டுமின்றி, தனிநபர் கடன், […]

செய்தி வட அமெரிக்கா

எல் சால்வடாரில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றம்!

எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், 40 ஆயிரம் பேரை அடைக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது.அதன்படி கடந்த மாதம் 25ம் திகதி அந்த சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கைதிகளுக்கு […]

You cannot copy content of this page

Skip to content