ஐரோப்பா செய்தி

கிரீஸில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானியர்கள் இருவர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் பொலிஸார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  […]

ஐரோப்பா செய்தி

மக்ரோனின் ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக பிரான்ஸ் எதிர்ப்பாளர்கள் பேரணியில் மோதல்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய பிரேரணைக்கு  எதிரான பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால், பாதுகாப்பு தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதேபோன்ற  ரென்ஸ், போர்டோக்ஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் பேரணிகளில் மோதல்கள் வெடித்தன, நான்டெஸில் ஒரு வங்கிக் கிளை மற்றும் கார்கள் எரிக்கப்பட்டன. இருப்பினும், பொதுமக்களின் விரக்தியானது பரந்த மேக்ரோன் எதிர்ப்பு உணர்வாக உருவெடுத்திருந்தாலும், கடந்த வாரத்தை […]

செய்தி தமிழ்நாடு

கராத்தே பட்டய தேர்வில் அசத்திய மாணவிகள்

  • April 15, 2023
  • 0 Comments

தற்காப்பு கலைகளில் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக கராத்தே பயின்று வருகின்றனர். முன்னர் மாணவர்கள் மட்டுமே கற்று வந்த  கலையாக கராத்தே தற்போது இளம் மாணவிகளும்  ஆர்வமுடன் பயிற்சி பெற துவங்கியுள்ளனர். குறிப்பாக மாணவர்களை விட அதிகம் கராத்தே பயிற்சயை மாணவிகள் எடுத்து வருகின்றனர்.அதன் படி கோவை  மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக கராத்தே பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பட்டைய தேர்வு மற்றும் கராத்தே பயிற்சி முகாம் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமி; தந்தைக்கு கிடைத்த சிறைத்தண்டனை

  • April 15, 2023
  • 0 Comments

இந்த நடவடிக்கை வேண்டாமென குறித்த பெண் சமிக்ஞை செய்வது போலவும் அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட அந்தப் பாடசாலையின் அதிபர் உடனடியாகவே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.அதனையடுத்து 13 வயதான அந்தச் சிறுமியை தந்தையிடமிருந்து பிரித்துச் சென்ற பொலிஸார்  சிறுவர்கள் காப்பகமொன்றுக்கு அனுப்பியிருந்தனர். ரஷ்யாவின் தாக்குதல்களை விமர்சிக்கும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தச் சிறுமியின் தந்தையையும் கைது செய்திருந்தனர்.   இந்த நடவடிக்கை வேண்டாமென குறித்த பெண் சமிக்ஞை செய்வது போலவும் அந்த […]

செய்தி தமிழ்நாடு

சோலார் கார் பந்தயம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது. சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். இதில்,தமிழகம்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர்கள் பங்கேற்றனர்.பொறியியல் துறையின் கல்லூரி மாணவ […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மன் வழங்கிய டேங்கர்கள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது லெப்பர்ட் 2 வகையைச் சேர்ந்த 18  டேங்குகள் வழங்குவதாக ஜெர்மனி உறுதி அளித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதி திங்கள் கிழமை பிற்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். இந்தவகை டேங்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தின் சேலஞ்சர் […]

செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தை வீ தமிழ்மணி திறந்து வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் வாத உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளருமான வீ தமிழ்மணி கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், இதில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் […]

ஐரோப்பா செய்தி

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்க தயாராகும் ரஷ்யா?

  • April 15, 2023
  • 0 Comments

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக ரஷ்யா சோதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானிய கடல் எல்லைக்கு வெளியே உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகள் 60 மைல்களுக்கு அப்பால் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு பெரும் செல்வாக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமாக செல்வாக்கு வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 28 சதவீத செல்வாக்குடன் உள்ளார். பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் குறைவாகும். அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் பின்னர் மீண்டும் மிக மோசமாக செல்வாகு வீழ்ச்சியினை சந்தித்துள்ளார். ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி […]

செய்தி தமிழ்நாடு

குருத்தோலை ஞாயிறு பவனி சிலுவை யாத்திரையில் இயேசுநாதர் வேடமடைந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் கொள்ள குண்டா பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் குருசேகரம் சார்பில் அருள் திரு ராஜ்குமார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது இதில் கிறிஸ்துவ ஆலயத்தில் இருந்து பவணியாக புறப்பட்ட திரளான கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் வேடமனிந்து சிலுவையில் அறையப்பட்ட காட்சிகளைக் கொண்டு பவனி தொடங்கியது ஏசுநாதர் ஜெபம் செய்தவாறு பேரணியாக பள்ளிப்பட்டு வரை இந்த பேரணி நடைபெற்றது இதில் திரளான ஆண் பெண் குழந்தைகள் என […]

You cannot copy content of this page

Skip to content