இலங்கை

விவாதத்திற்கு வரும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

  • June 20, 2023
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம் நாளை (21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை கூடியநிலையில், விவாதத்திற்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளய தினம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் வியாழக்கிமை 22 ஆம் திகதி  வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஜூன் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக […]

இந்தியா

கேதார்நாத் கோவில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறி எறிந்த பெண்

  • June 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. கேதார்நாத் சிவன் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். […]

இலங்கை

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிக்க நடவடிக்கை!

  • June 20, 2023
  • 0 Comments

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து,  புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைய புனரமைப்பதற்காக  168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள்,  கப்பல்துறை மற்றும் […]

ஐரோப்பா

விபரீத முடிவை எடுத்த பிரபல வைத்தியர் … காரணமாயமைந்த ஆன்டிபயாடிக் சிகிச்சை

  • June 20, 2023
  • 0 Comments

இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகில் முதன்முதலாக பெனிசிலின் என்னும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது.காலப்போக்கில் புதிது புதிதாக பல ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆன்டிபயாடிக்குகளைப் பொருத்தவரை, அவை உடலுக்குள் சென்று, உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை, குறிப்பாக பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி அவை நோய்க்கிருமிகளைக் கொல்லும் அதே நேரத்தில், […]

இலங்கை

ஏழு பயணங்கள் – 50 மில்லியன் செலவு : இலங்கை அமைச்சரின் வெளிநாட்டு பயண செலவுகள்!

  • June 20, 2023
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக செய்தி வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் விளக்கமளித்துள்ள அலிசப்ரி, இந்த தகவல் முற்றிலும் தவறானது என கடுமையாக சாடியுள்ளார். குறித்த தொகையானது, 5 தேசிய பிரதிநிதிகளின் பயணத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், தென்கிழக்கு ஆசிய […]

மத்திய கிழக்கு

நாய் வளர்ப்பிற்கு தடைவிதித்துள்ள எகிப்து ; கவலையில் உரிமையாளர்கள்

  • June 20, 2023
  • 0 Comments

எகிப்து அரசாங்கம் டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர் போன்ற நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளமை நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வீலர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. குறித்த இன நாய்களை வைத்திருப்பவர்கள் […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் சீன உணவகத்தில் கோடாரி தாக்குதல் ;4 பேர் படுகாயம்

  • June 20, 2023
  • 0 Comments

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார். கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் கோடாரி […]

பொழுதுபோக்கு

“கொன்று விடுவார்கள்” இந்தியன் – 2 குறித்து காஜல் வெளியிட்ட செய்தி

  • June 20, 2023
  • 0 Comments

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இறுதி கட்ட படிப்பிடிப்பை நெருங்கி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர், ‘இந்தியன் 2’ படத்தின், இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் அப்பாவாக நடித்த கமலஹாசனுக்கு சுகன்யா ஜோடியாகவும், மகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக […]

ஐரோப்பா

தீவிரமடையும் போர் -24 மணி நேரங்கள் ஆயுத தயாரிக்கும் ரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்கள்

  • June 20, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருவதனால் ரஷ்யாவுக்கு அதிகளவில் ஆயதங்கள் தேவைப்படுகின்றது. அதற்காக ரஷ்யாவின் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்க 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன. “நாங்கள் இராணுவ உற்பத்தியின் உற்பத்தியை 2.7 மடங்கு அதிகரித்துள்ளோம், மேலும் மிகவும் தேவையான உபகரணங்களுக்கு வரும்போது 10 மடங்கு. உக்ரேனியப் படைகளைப் பொறுத்தவரை, “விரைவில் அவர்கள் அதன் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்” என்று புட்டின் கணித்துள்ளார். ஏனெனில் அது முறையாக அழிக்கப்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் […]

பொழுதுபோக்கு

11 வருடங்கள் போய்ட்டு!! அப்பாவாகி விட்டார் ராம்சரண்

  • June 20, 2023
  • 0 Comments

பிரபல தெலுங்கு ராம்சரணுக்கும், அவரது மனைவி உபாசனாவிற்கும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணும், சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மகதீரா, ரங்கஸ்தலம், ஆர்.ஆர்.ஆர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள ராம்சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை […]