சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அத்துடன் கடந்த ஏப்ரல் 25ஆ ம் திகதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் இவ்வாறு இன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]