ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 418,500 இனால் அதிகரிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாதங்களில் மக்கள் தொகை 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 418,500 ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில், 302,900 பிறப்புகளும் 188,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன, மேலும் பிறப்புகளின் எண்ணிக்கை 2.3 சதவீதத்தால் குறைந்துள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 10.8 […]

நியூசிலாந்தை 7.1ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு !

  • April 18, 2023
  • 0 Comments

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நியூசிலாந்து ஊடகங்களில் உள்ள அறிக்கைகள், பிராந்தியத்தில் தொடர்புடைய மீட்பு நடவடிக்கைகளை வெளியிட பரிந்துரைக்கின்றன. எனினும், அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பெற்றோரின் கவனயீனம் – 3 வயது சிறுமியின் பரிதாப நிலை

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்கு விக்டோரியாவில் பாடசாலை பேருந்தில் 3 வயது சிறுமியை கிட்டத்தட்ட 5 மணிநேரம் விட்டுச் சென்ற சம்பவம் குறித்து விக்டோரியா மாநில பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த சிறுமியை ஷெப்பர்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடந்த 10ம் திகதி காலை 09 மணியளவில் பகல் நேரப் பேருந்து ஒன்று ஏற்றிச் சென்றது. எனினும் அவர் மதியம் 02.45 மணி வரை பேருந்திலேயே இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவரால் சிறுமியைக் கண்டுபிடித்தபோது, […]

ஆஸ்திரேலியா

5 இல் 2 அவுஸ்திரேலியர்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என அவுஸ்திரேலிய கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது

  • April 18, 2023
  • 0 Comments

40 சதவீதத்துக்கும் அதிகமான அவுஸ்திரேலியர்கள் 15 வயதை எட்டியதில் இருந்து வன்முறையை அனுபவித்துள்ளனர் என்று தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய புள்ளிவிபரத்திணைக்களம்  (ABS) வெளியிட்ட சமீபத்திய தனிநபர் பாதுகாப்பு ஆய்வின் (PSS) முடிவுகளின்படி, 8 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில்  41 சதவீதம் பேர் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த தரவுகளின் படி ஆண்களை விட பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி நிலை!

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில், சராசரி வெப்பநிலை குறைந்து, லா நினா நிலை மறைந்து எல் நினோ நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் மாதங்களில் கடுமையான வெப்பம் – வறட்சி நிலைகள் மற்றும் காட்டுத் தீயை கூட எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் வரவுள்ள போதிலும் இம்முறை அதிக குளிரான காலநிலையை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 2015-ம் ஆண்டு […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்து!! பரிதாபமாக மூவர் பலி

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னர் உயிர் ஆபத்தில் இருந்த இருந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு மெனங்கிள் பூங்காவில் உள்ள ஹியூம் மோட்டார்வேயில் பயணித்த எஸ்யூவி வாகனம் சிமென்ட் டிரக் மீது மோதியதால் மூன்று மாத குழந்தை ஐவி ஆபத்தான நிலையில் வெஸ்ட்மீடில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். எனினும், குழந்தை புதன்கிழமை இறந்ததாக பொலிசார் தெரிவித்தனர். குழந்தையின் தாயார் கத்ரீனா சிலா, 34, மற்றும் மூத்த […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவால் சேதமடைந்துள்ள ஓசோன் துளை- ஆய்வில் கண்டுபிடிப்பு!

  • April 18, 2023
  • 0 Comments

தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் பரவிய மிக மோசமான காட்டுத்தீயானது ஓசோன் படலத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தில், ஓசோன் துளையை பாதிக்கக்கூடிய ரசாயனங்கள் வெளியேறியதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இப்படியான காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை மூட்டமானது, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் அமைப்பை சேதப்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அவுஸ்திரேலொயாவில் ஏற்பட்ட அந்த மோசமான காட்டுத்தீக்கு 36 பேர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3 பில்லியன் மக்கள் பாதிப்புக்கு […]

ஆஸ்திரேலியா

பாக்டீரியாவில் ஓடும் வாகனங்கள் – ஆஸ்திரேலியா ஆய்வாளர்களின் அபூர்வ கண்டுபிடிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மண்ணில் இருக்கும் பாக்டீரியா மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மின்சாரம் குறித்த ஆராய்ச்சில் ஈடுபட்டு இருந்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர். மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள ஹைட்ரஜனை கொண்டு மின்சாரம் தயாரிப்பதை கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகா மாதிரியான பிரதேசம் முதல் எரிமலையை தன்னுள் வைத்திருக்கும் மலைகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் இருக்கும் ஹைட்ரஜனை கொண்டு வளர்வது இயல்பான ஒன்றாகும். ஹைட்ரஜனை எப்படி மின்சாரமாக […]

ஆஸ்திரேலியா

வெள்ளக்காடாக மாறிய ஆஸ்திரேலியா – வெளியேற்றப்பட்ட மக்கள்

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தொலைதூர நகரத்தில் வசிப்போரை நேற்று வெளியேற்றியுள்ளது. அவசரகாலச் சேவைகள் பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது. அவர்கள் மேட்டுப்பாங்கான இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இன்று வெள்ளப்பெருக்கு மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கருத்திற்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மேலும் பலரை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 100 பேர் அந்த நகரத்தில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வங்கி அட்டை மோசடியால் பல பில்லியன் டொலர்களை இழக்கும் மக்கள்

  • April 18, 2023
  • 0 Comments

வங்கி அட்டை மோசடியால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் இழந்த தொகை ஒரு பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, ஒருவரால் மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் சராசரி தொகை 299 டொலர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1058 பேரை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது கடன் அட்டை அல்லது டெபிட் அட்டை மோசடியில் சிக்கியவர்களின் சதவீதம் 17 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த […]

You cannot copy content of this page

Skip to content