இலங்கை

எஹலியகொடையில் இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : 20 பேர் காயம் – ஐவர் கவைலக்கிடம்!

  • June 26, 2023
  • 0 Comments

எஹலியகொடையில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இன்று (26.09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பேருந்தின் மீது மற்றுமொரு சொகுசு பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், சொகுசு பேருந்து முன்னோக்கி தள்ளப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதி […]

பொழுதுபோக்கு

போர் தொழில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி!! கெத்து காட்டிய படக்குழு

  • June 26, 2023
  • 0 Comments

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கேரளாவில் செய்த லைப் டைம் வசூல் சாதனையை போர் தொழில் திரைப்படம் முறியடித்து கெத்து காட்டி உள்ளது. தமிழ் சினிமாவுக்கு 2023ஆம் ஆண்டு ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு இளம் இயக்குனர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் தான் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படம் […]

ஐரோப்பா

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் வான் தாக்குதல்; இரு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

  • June 26, 2023
  • 0 Comments

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள், 9 பொதுமக்கள் உள்பட13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதியில் ரஷ்ய விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று போர் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். சந்தையில் குண்டுகள் மழைபோல் பொழிந்ததாகவும் எங்கும் சடலங்களும் ரத்தவாடையும் இருந்ததாகவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு

முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்

  • June 26, 2023
  • 0 Comments

கோயம்புத்தூரை சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். சிறுவயது முதலே ஷர்மிளாவுக்கு வாகனங்கள் இயக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்துள்ளது.இதற்காக ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்தை இயக்கினார், கோவையின் முதல் பெண் ஓட்டுநர் என பலரது பாராட்டுகளையும் பெற்றார்.திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த தினத்தன்று, நடந்துனருடன் ஏற்பட்ட தகராறால் வேலையை இழந்தார் ஷர்மிளா. இந்நிலையில் வாடகை கார் ஓட்டும் தொழில் […]

இந்தியா வட அமெரிக்கா

ஒபாமா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

  • June 26, 2023
  • 0 Comments

இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்த ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து கண்டனம் வெளியிட்டுள்ளார் . அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் பிரதமர் மோடியும் ஜனாதிபதி ஜோ பைடனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்களின் இந்த பேட்டிக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,“இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால் […]

ஆசியா

அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வடகொரியா!

  • June 26, 2023
  • 0 Comments

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை தண்டிக்க வலிமையான, முழுமையான ஆயுதம் வடகொரியாவின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஆயுதங்களை சோதனை செய்து, அமெரிக்காவுடன், பதற்றத்தை அதிகரித்து வருகிறது. கொரியப் போர் நடைபெற்று 73 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பியோங்யாங்கில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 120,000 உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் அமெரிக்காவை […]

வட அமெரிக்கா

அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிபர்களிடையே பேச்சு வார்த்தை

  • June 26, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி […]

செய்தி

விஜய் மீது பொலிஸில் பரபரப்பு புகார்!! காரணம் தெரிந்தார் அதிர்ச்சியடைவீர்கள்….

  • June 26, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ’லியோ’. அண்மையில் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரவிக்கும் வகையிலும், ரவுடியிசனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் ஒன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

தமிழக அரசே!! ’மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யுங்கள்! சுவரொட்டிகளால் பரபரப்பு

  • June 26, 2023
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் தயாராகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த படம் வருகிற 29ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், […]

இலங்கை

இலங்கையில் யுவதியின் உயிரை பறித்த கோர விபத்து

  • June 26, 2023
  • 0 Comments

அவிசாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, ​​அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]