உக்ரைனின் பாக்முட் நகரில் தொடர்ந்து போரிடும் வாக்னர் படையினர்
கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைச் சுற்றிய வட்டாரங்களில் போரிட தொடர்ந்துள்ளது. ரஷ்யாவின் துணை ராணுவப் படையான வாக்னர் அவ்விடத்தில் பல மாதங்களாகப் போரிட்டு வருகிறது. நேற்று அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல்களை முறியடித்ததாக உக்ரேன் சொன்னது. பாக்முட் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் வரை தனது படைகள் முன்னேறிச் சென்றிருப்பதாக உக்ரைனின் கிழக்கு ராணுவத் தளபத்தியம் தெரிவித்தது. இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான பதிலடித் தாக்குதல் விரும்பியதை விட மெதுவாகப் போய்க்கொண்டிருப்பதாக உக்ரைனிய […]