இலங்கை

வவுனியா- விடுதி ஒன்றில் திடீர் சுற்றி வளைப்பு ; இளம் பெண் உட்பட நால்வர் கைது

  • July 5, 2023
  • 0 Comments

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விருத்தினர் விடுதியில் விபச்சாரம் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது பாலியல் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும் […]

பொழுதுபோக்கு

ஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் ஜீவா: விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டு வரும் படம் ‘யாத்ரா 2’. இப்படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 8ஆம் திகதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை வைத்து ‘யாத்ரா’ படத்தை இயக்கிய மஹி வி. ராகவ் இயக்கிய சுயசரிதை படம் பிப்ரவரி 2024 இல் திரையிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படாது!

  • July 5, 2023
  • 0 Comments

முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்படாது என தாய்லாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘முத்துராஜா’ (சக் சூரின்) இப்போது எச்.எம். மன்னரின் ஆதரவில் இருப்பதால் அது மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவது சந்தேகமே என்று  தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்தார். முத்துராஜா தற்போது லம்பாங் மாகாணத்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அடுத்த பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தை தயார் செய்ய ஏக்கருக்கு 20,000 ரூபாய்.வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லாத தொகையாக இந்த நிதி வழங்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சோளச் செய்கைக்குத் தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், […]

ஐரோப்பா

வாக்னர் கூலிப்படையின் தலைவர் படுகொலை செய்யப்படுவாரா?

  • July 5, 2023
  • 0 Comments

வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் உளவுத்துறை தவைலர், மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ்,  யெவ்ஜெனி பிரிகோஜினின் கலகத் திட்டங்களை “சிறிது காலத்திற்கு” கியேவ் அறிந்திருந்து எனக் கூறினார். உக்ரைன் மீதான விளாடிமிர் புட்டின் முழு அளவிலான படையெடுப்பில் கூலிப்படை குழு இனி அச்சுறுத்தலாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது யெவ்கெனி பிரிகோஜின் படுகொலை […]

இந்தியா

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் : வெளியான விசாரணை அறிக்கை

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாகவும் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கை முற்றிலுமாக அகற்றப்பட்டதாக குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை […]

இலங்கை

ஹட்டனில் ஒருதொகை ID-க்களுடன் ஒருவர் கைது

  • July 5, 2023
  • 0 Comments

ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளை அவர், தம்வசம் வைத்திருந்துள்ளார்.ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், […]

பொழுதுபோக்கு

மீண்டும் விஷ்ணு அவதாரத்தில் பிரபாஸ்? அப்போ கமல்ஹாசன் யார்?

  • July 5, 2023
  • 0 Comments

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக ப்ராஜெக்ட் கே என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் விஷ்ணு பகவானின் ஒரு அவதாரம் என்று பரபரப்பான பேச்சுக்கள் டோலிவுட்டில் வலம் வருகின்றன. இந்தியா சினிமாவையே திரும்பிப் பார்க்க […]

ஐரோப்பா

காலரா மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கெர்சன் நகர மக்கள்!

  • July 5, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேனிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் குறிப்பாக கடுமையான குடல் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பை எடுத்துக்காட்டியுள்ளனர். அத்துடன் காலரா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலர் காலரா தடுப்பூசியை இரகசியமாக அவர்களின் குடும்பத்தினருக்கு மாத்திரம் வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பிராந்தியத்தில் சுகாதார நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. உக்ரேனிய ஆயுதப் படைகளின் பொதுப் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • July 5, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்திய தூதர் மன்ப்ரீன் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜார் என்பவரின் படுகொலைக்கு இவர்கள்தான் காரணம் என்ற சுவரொட்டிகள் இந்த இரண்டு அதிகாரிகளின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்கள் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி ஆஸ்திரேலிய அரசை இந்திய வெளியுறவுத்துறை […]