இலங்கை

புதிய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தம்!

  • July 7, 2023
  • 0 Comments

இலங்கைக்கும் –  புதிய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்படும் பணம் தொடர்பாக திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது வருமானமாக பெறும் பணத்தை இலங்கை ரூபாயில் இருந்து அமெரிக்க டொலாராக மாற்றும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சப்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட 1% ராயல்டி கட்டணத்திற்கு பதிலாக ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் விதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் […]

வட அமெரிக்கா

மெட்டாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கடிதம் அனுப்பியுள்ள ட்விட்டர்

  • July 7, 2023
  • 0 Comments

த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெட்டா நிறுவனத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனத்தினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலியில் 18 மணித்தியாலங்களில் 30 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்திற்கு போட்டியாக இந்த செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்து புதிய விதிகளை அறிமுகப்படுத்தி […]

இலங்கை

மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

  • July 7, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(7) காலை 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது கருத்து […]

இலங்கை

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க துரித நடவடிக்கை – பிரதமர் உறுதி!

  • July 7, 2023
  • 0 Comments

புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து இன்று (ஜூலை 07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,  அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை, முன்னாள் பொலிஸ் மா […]

ஆசியா

அணு உலை கழிவுநீரை கடலில் திறந்து விடும் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

  • July 7, 2023
  • 0 Comments

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. தனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. […]

செய்தி மத்திய கிழக்கு

பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த ஈரான்!

  • July 7, 2023
  • 0 Comments

பிரித்தானியா ஈரான் மீது புதிதாக  பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், ஈரான் கட்டணம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்தானியாவின் தூதர் இசபெல் மார்ஷை வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து கண்டணம் வெளியிட்டுள்ளது. புதிய  பொருளாதாரத் தடைகளானது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தாக்கக்கூடிய புதிய அளவுகோல்களை உருவாக்குவதன் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை விரிவுபடுத்துகிறது. இதற்கிடையே ஈரானில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ட்ரோன்களை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தெஹ்ரான் சிரியாவின் நெருங்கிய மூலோபாய நட்பு நாடாக உள்ளது, […]

பொழுதுபோக்கு

“டேய் இங்க வாடா.. வடிவேலுவ நடிக்க சொல்லுடா..” யார் சொன்னதுனு தெரியுமா?

  • July 7, 2023
  • 0 Comments

வடிவேலு உடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகும், அவன் காமெடி தான் நல்லாயிருக்கு, அவன நடிக்க சொல்லு என விஜயகாந்த் சொன்னதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர்கள் என்றால் ஒருசிலர் தான். அதில் வடிவேலுவுக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னுடைய உடல்மொழியால் ரசிகர்களை மகிழ்வித்து, காமெடியில் தனெக்கென தனி பாணியை உருவாக்கி கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. அப்படிப்பட்ட காமெடி ஜாம்பவானுக்குள்ளேயும் ஒரு நடிப்பு திறமை ஒளிந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு […]

இலங்கை

இலங்கையில் கைப்பேசியால் விபரீதம் – பாடசாலை மாணவியின் அதிர்ச்சி முடிவு

  • July 7, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹிரலு நிகவெவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே உயிரிழந்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மாணவி 15 வயதுடைய கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையாரின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றபோது அதிபரிடம் அகப்பட்டுள்ளார். இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் இணையும் இன்னும் சில இயக்குனர்கள் – இதுக்கு முடிவே இல்லையா?

  • July 7, 2023
  • 0 Comments

பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் மற்றும் மன்சூர் அலிகான் என்று ஒரு பெரிய இயக்குனர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவின் பல திரைத்துறைகளை சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், […]

அறிந்திருக்க வேண்டியவை

திருமணமான பெண்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்வதற்கான காரணம்!

  • July 7, 2023
  • 0 Comments

திருமண வாழ்க்கையை நடத்த நமது முன்னோர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். அதை இப்போது வரை நாம் கடைப்பிடித்து வருகின்றோம். ஒரு பெண் திருமணமாகி முதல் முறை கணவரின் வீட்டிற்குள் செல்லும்போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லுவார்கள். அதற்கு சரியான காரணம் பலருக்கும் தெரியாது. பெண்களின் கால்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அழகாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது. முதல் முறை திருமண பெண் புகுந்த […]