கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 30 பேர் கையொப்பம்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று (20.07) ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. தற்போது வரை 30 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று (20.07) ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. தற்போது வரை 30 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது. பாரிசின் புறநகரான பொண்டி நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. செவ்வாய்கிழமை (18) மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள்அனைவரும் இணைந்து […]
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகர் வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளின் சண்டையின்போது 12 வது சிறுமி மற்றொரு 11வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 9ம் திகதி டியரா சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார்.இதன்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அந்த அடையாளம் தெரியாத […]
மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (07.20) மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி மேலும் 328 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். அண்மையில் 300 பொருட்கள் மீதான இறக்குமதி நீக்கப்பட் நிலையில், தற்போது மேலும் […]
கடந்த ஒன்றரை தசாப்தங்களில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சந்தானம் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் ஹீரோவாக மாற முடிவு செய்தார். அவரது ஆரம்ப முயற்சிகளான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவற்றைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ மற்றும் ‘டிக்கிலூனா’ ஆகிய சூப்பர் ஹிட்களைப் பெற்றார். இருப்பினும் அவரது சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் […]
கனேடிய நகரமொன்றில், வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார்கள். போதைப்பொருள் கடத்தல் விசாரணை ஒன்று தொடர்பாக, Saskatchewan மாகாணத்திலுள்ள Prince Albert நகரில் வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்டார்கள். சோதனையின்போது அந்த வீட்டில் இரண்டு வகை போதைப்பொருட்கள், மூன்று துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடை ஒன்று மற்றும் 2,000 டொலர்கள் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக Alexandra Tinker (27) என்னும் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் […]
பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20.07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர் பொது போக்குவரத்து பேருந்து சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் […]
பிரித்தானியா சீனாவின் உளவு நடவடிக்கைகளை தடுக்க ஐந்து நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகவர்கள் மூன்றாம் நாடுகள் வழியாக பிரித்தானியா உளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலையில் இவ்வாறு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டொமினிகா, ஹோண்டுராஸ், நமீபியா, திமோர்-லெஸ்டே மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரித்தானியா விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இடம்பெயர்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே செய்யப்படுவதாகக் கூறிய உள்துறைச் செயலர், இந்த நாடுகளுடனான மோசமான […]
70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பிரித்தானியா கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதாவது இந்த வாரத்திலிருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்யப்படுவதால், இந்த வாரத்திலிருந்து புதிய கடவுச்சீட்டுகளைப் பெறும் பிரித்தானியர்கள் இதனை கவனிக்கலாம். கடைசி ஆண் மன்னரான சார்லஸின் தாத்தா கிங் ஜார்ஜ் VI இன் ஆட்சியின் முடிவில் 1952 க்குப் பிறகு முதல் முறையாக […]
நடிகர் ரஜினிகாந்த், மாலைதீவுக்கு திடீரென சென்றிருப்பதன் பின்னணியில் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறி பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதேபோல் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நடித்துள்ள மொய்தீன் […]