வட அமெரிக்கா

17 வயது கேரள மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி!

  • July 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேரள மாணவர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் கைப்புழா பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் 1992ம் ஆண்டு வேலை காரணமாக தன் மனைவி ராணியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.பின் மனைவி ராணியும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். சன்னி-ராணி ஜோடிக்கு ஜாக்சன், ஜோதி மற்றும் ஜாஸ்மின் என்ற மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் மூவரும் தங்கள் அமெரிக்கா பள்ளியில் தங்கள் கல்வியை […]

இலங்கை

இலங்கையில் புலக்கத்திற்கு வரவுள்ள இந்திய நாணயம் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்திய நாணயத்தை செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுவார்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான விஜயத்தின் போது செய்துகொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் இன்று (22.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்திய விஜயத்தின் போது, ​​பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் […]

இலங்கை

மீசாலையில் கடவையை கடக்கமுற்பட்ட போது ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!

  • July 22, 2023
  • 0 Comments

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையகரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது. மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

உலகம்

அர்ஜென்டினாவில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான ”ஆண்குறி மீன்கள்”!

  • July 22, 2023
  • 0 Comments

அர்ஜென்டினாவின் ரியோ கிராண்டே நகரின் டியர்ரா டெல் ஃபியூகோ மாகாணத்தில் உள்ள எல் முர்டில்லருக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான ஆண்குறி மீன்கள், கரை ஒதுங்கியுள்ளன. உள்ளூர் போர்டல் “Gaceta Truncadense” வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முந்தைய நாள் இரவு இந்தப் பகுதி முழுவதும் வீசிய கடும் புயலுக்குப் பிறகு குறித்த மீன்கள் கரையொதுங்கியதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்கள் ஆண்குறி மீனின் தோற்றத்தை ஒரு விசித்திரமான நிகழ்வு என்று அழைக்கிறார்கள். இவ்வகையான மீன்களை உள்ளுர் மீனவர்கள் […]

இலங்கை

யாழில் தன் நகையை களவாடிய தங்கைக்கு அக்கா செய்த செயல்..!

  • July 22, 2023
  • 0 Comments

தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார்.தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.வீட்டிற்கு வந்தவர் , தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார். […]

இந்தியா தமிழ்நாடு

பழங்குடி பெண்ணுக்கு கொடூரம்-பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த பொலிஸார்!

  • July 22, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் தமிழக பழங்குடி பெண்ணை திருட்டை ஒப்புக் கொள்ளக் கூறி நிர்வாணப்படுத்தி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி ஆந்திர பொலிஸார் சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள புலியாண்டபட்டி பகுதியில் உள்ள குறவர் இன மக்கள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பழங்குடி பெண்,”கடந்த ஜூன் மாதம் 11ம் திகதி என் கணவர் வைரமுத்துவை தேடி ஆந்திர […]

இலங்கை

இலங்கையில் நள்ளிரவில், நடிகையை காணவந்த இயக்குனர் – பொலிஸ் நிலையம் வரை சென்ற நடிகை!

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையில் பிரபல நடிகைக்கும் பிரபல திரைப்பட இயக்குனருக்கும் இடையே இன்று (22.07) காலை மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த நடிகையை காண திரைப்பட இயக்குனர் ஒருவர் நள்ளிரவில் பாணந்துறை பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற நிலையில், இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இயக்குனர் தங்களை தாக்கி கார் சாவியை பறித்ததாக பிரபல நடிகையும் மற்றொரு பெண்ணும் பெலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில். இயக்குனரும் முறைப்பாடு […]

இலங்கை

யாழில் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவும் திருடர்கள் ;காணி உரிமையாளர்கள் விசனம்

  • July 22, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி , பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட , காங்கேசன்துறை மாங்கொல்லை […]

பொழுதுபோக்கு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “தி மார்வெல்” டிரெய்லர் 4 மொழிகளிலும் வெளியானது

  • July 22, 2023
  • 0 Comments

இந்த தீபாவளிக்கு, மார்வெல் ஸ்டுடியோவின் தி மார்வெல்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியானது. இந்த பண்டிகைக் காலத்தில் தீவிரமான, சாகசம் மற்றும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இது வெளிவருகின்றது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் முதன்முறையாக, கொடிய தீய சக்திகளின் மீது அழிவைக் கட்டவிழ்த்துவிட, பயங்கரமான சூப்பர் ஹீரோக்களின் சக்தி வாய்ந்த மூவரும் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு ஒரு பிளாக்பஸ்டர் சினிமா சாகசத்தை வழங்குகிறார்கள்.. “தி மார்வெல்ஸ்” இல், மிகவும் சக்திவாய்ந்த அவெஞ்சர்களில் ஒருவரான கரோல் […]

உலகம்

உருகுவே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் பென்குயின்கள்‘!

  • July 22, 2023
  • 0 Comments

கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பென்குயின்கள் இறந்துவிட்டதாகத் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பென்குயின்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்கவில்லை எனவும், இந்த விடயம் மர்மமாகவே இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். மாகெல்லானிக் பென்குயின்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும், உருகுவேயின் கரையோரங்களில் ஒதுங்குவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லீசாகோயன் கூறினார். மாகெல்லானிக் பென்குயின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் கூடு கட்டுகின்றன. தெற்கு அரைக்கோளத்தின் குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரைத் தேடி வடக்கே இடம்பெயர்ந்து, பிரேசிலிய மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோவின் […]