உலகம் செய்தி

மார்க் ஜுக்கர்பெர்க் பற்றி தெரியாத ரகசியம்

  • May 7, 2023
  • 0 Comments

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு தொழில்முனைவோர் மட்டுமல்ல திறமையான விளையாட்டு வீரரும் கூட என்பது இப்போது அனைவருக்கும் தெரியாத ரகசியம் . சமீபத்தில் அவர் தனது முதல் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்றார் அங்கு அவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இந்த மறக்க முடியாத நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஜுக்கர்பெர்க்கின் பயிற்சியாளர் அவரை “சைலன்ட் கில்லர்” என்று அறிமுகப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

கருங்கடலில் 22 ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா தெரிவிப்பு!

  • May 7, 2023
  • 0 Comments

கருங்கடலில் 22 உக்ரைன் ட்ரோன்களை  ரஸ்யாவின் வான் பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்து அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. உக்ரேனிய நகரமான பாக்முட்டில் அதன் படைகள் அதிக இடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக  கிரிமியாவில் ரஷ்யா 10 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

டெங்கு குறித்து அவதானம்

  • May 7, 2023
  • 0 Comments

15 மாவட்டங்களைச் சேர்ந்த 55 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தொற்று நிலைமை உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை செய்தி

தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி| மக்கள் அவதானம்

  • May 7, 2023
  • 0 Comments

  ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்பு பகுதியில் இளைஞர்களிடம் பணம் பெற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள 5 இளைஞர்களிடம் பெண் 25 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய […]

அறிந்திருக்க வேண்டியவை ஐரோப்பா

பிரித்தானியாவில் குடியுரிமையை பெற அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள்!

  • May 7, 2023
  • 0 Comments

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள், அங்கு தேர்வுகளை எழுத வேண்டும். அந்த தேர்வில் ஏறக்குறைய 18 தொடக்கம் 24 கேள்விகள் அடங்கியிருக்கும். பொதுவாக அந்த நாட்டிலேயே பிறந்து கல்வி கற்றவர்கள் கூட  தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கினர், தேர்ச்சி அடையவில்லை என்பதைதான் காட்டியுள்ளன. இந்த தேர்வினை எழுதுவதற்கு £50  செலவாகும். ஒருவர் 64 முறை தேர்வினை எழுத முடியும். ஆனால்  ஒவ்வொரு கேள்விகளும் முதல் […]

இலங்கை செய்தி

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  • May 7, 2023
  • 0 Comments

  சீரற்ற காலநிலையால் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை, பதுளை, குருநாகல் ,கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (07) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

ஐரோப்பா

ரஷ்யாவில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

  • May 7, 2023
  • 0 Comments

கோவிட் மற்றும் போர் ரஷ்யாவில் “பத்தாண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறையை” ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறைத்  தெரிவித்துள்ளது. இது குறித்து 14 ஆயிரம் முதலாளிகளிடம் ரஷ்ய வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்படி, 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2022 இல் நாட்டை விட்டு வெளியேறிய 1.3 மில்லியன் மக்களில் பலர் அதிக மதிப்புள்ள தொழில்களில் பணிப்புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் […]

ஐரோப்பா

உக்ரைனில் ஒரே இரவில் 10 மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிப்பு!

  • May 7, 2023
  • 0 Comments

உக்ரைன் ஒரே இரவில் 10 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக  ரஷ்ய ஆதரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவாஸ்டோபோல் துறைமுகம் மூன்று பேரால் தாக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  எந்த பொருட்களும் சேதம் ஏற்படவில்லை என்றும்  மாஸ்கோவில் நிறுவப்பட்ட கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். குண்டுவெடிப்புகளில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

பெவிகுயிக் போட்டு வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்

  • May 7, 2023
  • 0 Comments

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கீழே விழுந்து வெட்டுக் காயம் அடைந்த சிறுவனுக்கு பெவிகுயிக் போட்டு சிகிச்சை பார்த்த மருத்துவரின் கிளினிக்-கை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து அடைத்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தின் அலம்பூர் நகரை சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், கால் தவறி கீழே விழுந்ததில் தலையின் நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவரது தந்தை வம்சி கிருஷ்ணா அருகிலுள்ள ரெயின்போ மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் சிறுவனின் வெட்டுக் காயத்திற்கு அங்குள்ள […]

ஆசியா உலகம்

ஜப்பானில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் : ஒருவர் பலி!

  • May 7, 2023
  • 0 Comments

உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனை அடுத்து குறித்த பகுதியில், இரண்டாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த முறை […]

You cannot copy content of this page

Skip to content