22வது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தால் இலங்கை படு பாதாளத்திற்குள் தள்ளப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்
இலங்கையில் நடைமுறையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (25) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் […]