ஐரோப்பா

BBC ஊடகவியலாளரான இலங்கை தமிழர் காலமானார் – வேதனையில் சக ஊழியர்கள்

பிரித்தானியானியாவில்புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய BBCயின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா என்ற இலங்கை காலமானார்.

ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

67 வயதில் புற்றுநோயால் காலமான BBC பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜோர்ஜ் அழகையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

BBC newsreader George Alagiah has died | UK News | Sky News

BBCயின் தலைமை சர்வதேச நிருபர் Lyse Doucet அவரை “ஒரு சிறந்த ஒளிபரப்பாளர், ஒரு நல்ல சக ஊழியர் மற்றும் ஒரு சிந்தனைமிக்க பத்திரிகையாளர்” என வர்ணித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களிற்கு மேல் BBCயின் தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார். கடந்த 20 வருடங்களாக BBCயின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதற்கு முன்னர் BBCயின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார். ஜோர்ஜ் அழகையா ஈராக் ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார்.

BBC newsreader George Alagiah has died | UK News | Sky News

1990ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம்ஹ_சைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார்.

புருண்டியின் உள்நாட்டு யுத்தம் குறித்த செய்திகளிற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் விருதுகளை பெற்ற இவர் ருவன்டா இனப்படுகொலை குறித்து முதன்முதலில் செய்தி வெளியிட்ட BBCயின் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜ் மக்ஸ்வெல் அழகையா கொழும்பில் பிறந்தார்,அதன் பின்னர் கானாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் பிரிட்டனில் குடியேறினார்.

இலங்கையிலிருந்து வெளியேறியது மாத்திரமே இலங்கை குறித்த அவரது ஒரே சிறுவயது நினைவாக காணப்பட்டது.அவரது பெற்றோர்கள் கிறிஸ்தவ தமிழர்களாகும்.

அவரது தந்தை டொனால்ட் நீர் சுத்திரிகரிப்பு பொறியியலாளராகவும், தனது சொந்தநாட்டில் பாதுகாப்பற்று உணர்ந்ததால் உரிய கௌரவம் கிடைக்காததால் அவர் தனது குடும்பத்தை ஆபிரிக்காவிற்கு கொண்டுசெல்வதற்கு தீர்மானித்தார்.

George Alagiah revealed symptom he wished he'd caught earlier before bowel cancer death | The Independent

கானாவில் வாழ்க்கை சிறப்பானதாக காணப்பட்டது எனினும் திடீர் சதிப்புரட்சியை தொடர்ந்து நிலைமை மாற்றமடைந்தது அதனை தொடர்ந்து டொனால்ட் தனது குடும்பத்தை பிரிட்டனிற்கு அழைத்து செல்ல தீர்மானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மரணத்தால் BBC செய்தி சேவையின் ஊடகவியலாளர் மிகவும் வருத்தமடைந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

“ஜோர்ஜ போன்ற ஒரு மென்மையான, கனிவான, அதிக அறிவு மற்றும் துணிச்சலான நண்பர் மற்றும் சக ஊழியரைக் கண்டுபிடிப்பது கடினம்” என சக நிருபர் ஜோன் சிம்ப்சன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content