இலங்கை

இலங்கையில் மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து!

  • August 8, 2023
  • 0 Comments

நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மின்வெட்டை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான கூடுதல் மின்சாரம் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்று (08.08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் எனவும் […]

இலங்கை

19 வயதான பெண்ணை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்த கதி : தமிழர் பகுதியில் சம்பவம்!

  • August 8, 2023
  • 0 Comments

19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று (07.08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மரத்தில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு தெலிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் ஆர்முகன் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய […]

இலங்கை

EPF குறித்து வெளியான அறிவிப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டம் நேற்று (0708) நடைபெற்ற நிலையில், மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை

ஆயுதப்படையினரை களமிறக்க ஜனாதிபதி திட்டம்!

  • August 8, 2023
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8.08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கை

ஜனாதிபதி முன்னிலையில் பதில் தலைவர் பதவியேற்பு

  • August 8, 2023
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி சோபித ராஜகருணா, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று (07) பதவியேற்றார். அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியான எம்.சி.பீ. சஞ்சீவ மொறாயஸ் அவர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

ஆப்கானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவால் 200 பேர் மயக்கம்..!

  • August 8, 2023
  • 0 Comments

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை

கந்​தானையில் ஏற்பட்ட விபரீதம் – 120 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

  • August 8, 2023
  • 0 Comments

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்துள்ளனர். சுகயீனமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பாடசாலைகளை நோக்கி பெற்றோர் படையெடுத்தமையால் அங்கு […]

பொழுதுபோக்கு

ஒரு வழியா திருமணம் முடிஞ்சிது… TRB-யில் மீண்டும் எகிறியது கயல்…

  • August 8, 2023
  • 0 Comments

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி, கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்று கயல் முதலிடம் வகிக்கிறது. கடந்த மாதத்தில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்திருந்தது. சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்துள்ளது. சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலிலும் சன் […]

ஐரோப்பா

ஸ்வீடனில் விபத்தில் சிக்கிய ரயில் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

  • August 8, 2023
  • 0 Comments

கிழக்கு ஸ்வீடனில் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஸ்வீடனில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதால், மழையால் ரயில்வே கரை ஓரளவிற்கு அடித்துச் செல்லப்பட்டு, மூன்று பேர் […]

இலங்கை

இலங்கையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர்

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கையில் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப, கொள்கை வட்டி விகிதங்கள் மேலும் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.