இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

  • May 20, 2023
  • 0 Comments

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்கவர் எனவும், களனி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டம்

  • May 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் பேர்லின் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். 1936ஆம் ஆண்டு பேர்லின்’ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. 1936 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பேர்லின் நகரில் நடைபெற்றது. அவ்வருட குளிர்கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்மனியின், ஜேர்மிஷ் பார்டேன்கேர்சென் நகரில் நடைபெற்றன. […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற நபருக்கு கிடைத்த வாழ் நாள் அதிஷ்டம்!

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Oregon மாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவருக்கு மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்துள்ளது. ஒரு முறை அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாரத்துக்கு 1,000 டொலர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Robin Riedel இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வேலையிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் 2001ஆம் ஆண்டிலிருந்து அதிர்ஷ்டக் குலுக்கில் தொடர்ந்து கலந்துகொண்டதாகக் கூறினார். ரிடலுக்கு ஓர் ஆண்டில் மொத்தம் 52,000 டொலர் கிடைக்கும். கட்டணங்களைச் செலுத்துவது, வீட்டைப் புதுப்பிப்பது, திருமண […]

உலகம்

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்

  • May 20, 2023
  • 0 Comments

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களை பண நீக்கம் செய்வதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அதனால், பிரபல தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், மெட்டா நிறுவனமும் தீவிரம் காட்டி வருகிறது. அதில், முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் நான்கு ஆயிரம் […]

ஐரோப்பா

துருக்கியில் கடும் புயலால் பறந்த சோபா – வைரலாகும் வீடியோ

  • May 20, 2023
  • 0 Comments

துருக்கியில் ஏற்பட்ட கடும் புயலின் போது சோபா வானத்தில் பறந்து சென்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் வைரலான வீடியோ ஒன்று உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. துருக்கியின் அங்காராவில் கடுமையான புயலின் போது நடந்த ஒரு அசாதாரண நிகழ்வைக் இந்த வீடியோ காட்டுகிறது. நகரம் முழுவதும் காற்று வீசியதால், ஒரு வெளிப்புற சோபா ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து தூக்கி வானத்தில் பறந்தது. சோபாவை காற்றில் […]

இலங்கை

இலங்கையில் இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு

  • May 20, 2023
  • 0 Comments

இலங்கையில் இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் போது எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது தகவல் புறக்கணிப்பையோ செய்யக் கூடாது. அத்துடன், ஏமாற்றும், தவறாக வழிநடத்தும் அல்லது போட்டிக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளின் உண்மை விலையானது குறித்த பொருளுக்காக, இணைய சந்தை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள […]

ஐரோப்பா

பிரான்ஸில் நடந்த சோகம் – சிறுமி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

  • May 20, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறுமி ஒருவர் எட்டாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை Clichy (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Camille-Claudel வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் தனது பெற்றோர்களுடம் வசிக்கும் 17 வயதுடைய சிறுமி ஒருவர், அதிகாலை 3 மணி அளவில் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார். உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. […]

ஐரோப்பா

ஜெர்மனி அரசாங்கத்தின் புதிய நடைமுறை!

  • May 20, 2023
  • 0 Comments

ஜெர்மன் அரசு, மக்கள் தங்கள் பெயரையும் பாலினத்தையும் சட்டபூர்வமாக மாற்றுவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்ட முன்மொழிவைச் முன் வைத்துள்ளது. பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற விரும்புவர்களுக்கு, அதை மாற்றுவது என்பது ஒரு பெரிய நடைமுறை சிக்கலாக உள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அரசு, மக்கள் தங்கள் பெயரையும் பாலினத்தையும் சட்டபூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் வகையில் ஒரு சட்ட முன்மொழிவைச் முன்வைத்துள்ளது. ஜெர்மனை பொறுத்தவரையில் ஒரு நபர் பெயரை மாற்ற வேண்டும் என்றால், அவர் […]

உலகம் செய்தி

கார் ஏற்றுமதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முன்னிலை

  • May 20, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா வெற்றி பெற்றுள்ளது. 2023 முதல் காலாண்டில் சீனா 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் ஜப்பான் 954,185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும் கார்களை விட மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது தங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மின்சார வாகனங்களை இறக்குமதி […]

செய்தி

வடக்கின் புதிய ஆளுநருக்கு எதிராக போராட்டம்

  • May 20, 2023
  • 0 Comments

வடமாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எம்.எஸ்.சார்ள்ஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (19) யாழ்.மாநகர சபை வீதிக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். அவர் வடக்கில் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றியதாகவும், ஆனால் அந்த காலப்பகுதியில் அவர் மாகாணத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்கவில்லை என்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். அவர் மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது அவரது திறமையால் அல்ல என்றும் தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த பங்களிப்பின் காரணமாகவே என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அவர் மீது […]

You cannot copy content of this page

Skip to content