பொழுதுபோக்கு

சென்னையில் புதிய டிரைலரை வெளியிடும் ‘ஜவான்’ படக்குழு..

  • August 20, 2023
  • 0 Comments

ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். பல சூப்பர் ஹிட் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட உள்ளனர். அனிருத் இசையமைக்கும் ஜவான் படத்தின் மூலமாக நயன்தாரா எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவருடன் இணைந்து யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி, நடிகை தீபிகா படுகோன் (சிறப்பு தோற்றத்தில்) […]

இலங்கை

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை!

  • August 20, 2023
  • 0 Comments

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சையில் 2021ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மனவேதனையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த […]

ஆசியா

பாகிஸ்தான்- வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ; 11 தொழிலாளர்கள் பலி

  • August 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும் போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து […]

இலங்கை

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்ல திட்டம்!

  • August 20, 2023
  • 0 Comments

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்கு பங்களிக்கும் அனைவருக்கும் வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்குகளை விரைவாக அடையக்கூடிய முன்னணி துறையாக சுற்றுலாத்துறை திகழ்கிறது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரின் அதிகபட்ச […]

இலங்கை

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லையென்றால் கடும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்!

  • August 20, 2023
  • 0 Comments

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு துரிதமான தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென் அமெரிக்கா

பிரேசிலில் சூட்கேசுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் நிர்வாண உடல்!

  • August 20, 2023
  • 0 Comments

பிரேசில் நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவரின் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸா பாலோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆகஸ்டு 18ம் திகதி 28 வயதேயான தல்லிதா பெர்னாண்டஸ் என்ற இளம் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது. தல்லிதா திடீரென்று மாயமான நிலையில், அவரது நண்பர்களே பொலிஸாருக்கு தகவல் அளித்து, விசாரிக்க கோரியுள்ளனர். […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7இல் களமிறங்கும் கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக பக்கா பிளான்..

  • August 20, 2023
  • 0 Comments

வரும் அக்டோபர் எட்டாம் தேதி துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புதுப்புது அப்டேட் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. அந்த வகையில் சீசன் 7ல் நான்கு கதாநாயகிகளை விஜய் டிவி களம் இறக்க திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் மற்ற சீசன்களை காட்டிலும் சீசன் 7 வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த முறை இரண்டு வீடுகளை தயார் செய்து வைத்துள்ளனர் புதிய பழைய போட்டியாளர்களை கலந்து […]

இலங்கை

பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்!

  • August 20, 2023
  • 0 Comments

மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான கதவுகளைத் திறந்து விடாத வகையில் கடுமையான கண்காணிப்பின் பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நாங்கள் 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இதனை நிறுத்துவதன் மூலம், நாங்கள் இருப்புகளைப் பாதுகாத்தோம். ஒரு நாடு நீண்ட காலத்திற்கு இறக்குமதியைத் தடை செய்ய […]

ஆசியா

தைவானின் தேர்தல் விவகாரங்களில் தலையிடும் சீனா!

  • August 20, 2023
  • 0 Comments

சீனா நடத்திய ராணுவப் பயிற்சியின் போது 40க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்தை கடந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த செயலை ஆத்திரமூட்டும் செயல் என்று கூறிய தைவான், சீனா தனது நாட்டின் தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான வேட்பாளராக களமிறங்கிய தைவானின் தற்போதைய துணை ஜனாதிபதி வில்லியம் லாய் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவான் நேற்றைய (19.08) […]

இலங்கை

பயிற்சி முகாமிலிருந்து T-56 துப்பாக்கியுடன் தலைமறைவான விமானப்படை வீரர்!

  • August 20, 2023
  • 0 Comments

திருகோணமலை – மொரவெவ விமானப்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த விமானப்படை வீரரொருவர் T-56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மொரவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரே நேற்று (19) மாலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு காணாமல் போனவர் காலி- வக்வெல்ல வீதியை சேர்ந்த 51415 எனும் விமானப்படை இலக்கமுடைய எம்.டி. கவீஷ (22) என்பவரே தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. குறித்த விமானப்படை வீரர் துப்பாக்கியுடன் காணாமல் […]