இலங்கை

கனடாவில் இருந்து யாழ் வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிககொண்டிருந்த நபரே சனிக்கிழமை (26) திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே ஆவார். தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார். அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு […]

இலங்கை

திருகோணமலையில் மணல் ஆகழ்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

  • August 28, 2023
  • 0 Comments

திருகோணமலை-வெருகல் நாதனோடையில் மணல் அகழ்வதை எதிர்த்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்காக வெருகல் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மணல் ஏற்றுவதற்காக செல்லும் வழியை மறைத்து மணல் ஏற்றுவதற்காக சென்ற வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாவலி கங்கையை அண்மித்த நாதனோடை ஊடாக வெள்ளம் பெருக்கெடுத்து சிறியளவில் காணப்பட்ட ஓடை 2008ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெரிதாக உடைப்பெடுத்துள்ளது.இதனூடாக மக்கள் […]

பொழுதுபோக்கு

நடிகர் வடிவேலு வீட்டில் நடந்த சோகம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

  • August 28, 2023
  • 0 Comments

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நகைச்சுவை ஜாம்பவானான வடிவேலு தனது உடல்மொழி, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார். எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், ஆல் டைம் பேவரைட் நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலுதான். நகைச்சுவையில் கலக்கி வந்த வடிவேலு தான் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணசித்திர நடிகர் என்பதை மாமன்னன் படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்து […]

ஆசியா

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஜப்பானின் பயண திட்டம் ஒத்திவைப்பு

  • August 28, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக எச்.2.ஏ. ராக்கெட் ஏவும் திட்டம் தயாராக இருந்தது. இந்த ராக்கெட் இன்று காலை 9.26 மணியளவில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், சாதகமற்ற வானிலையால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் இந்த நிலவு பயண திட்டம் உருவாக்கப்பட்டது. நிலவை ஆய்வு செய்வதற்காக லேண்டரை தரையிறக்கும் இந்த நிகழ்வுக்கு ஸ்லிம் என பெயரிடப்பட்டது. […]

பொழுதுபோக்கு

புது மாப்பிள்ளையின் புதிய படம் தொடர்பில் இன்று வருகின்றது புதிய அப்டேட்

  • August 28, 2023
  • 0 Comments

கவின் முன்னணி ஹீரோக்களுக்கு இணையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘பியார் பிரேம காதல்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கத்தில் தற்போது கவின் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று மாலை […]

உலகம்

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்த தடை!

  • August 28, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பிரபலமான பேண்ட்-எ-அமிர் தேசியப் பூங்காவுக்குப் பெண்கள் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலிபான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பெண்கள் பேமியன் (Bamiyan) வட்டாரத்தில் உள்ள பேண்ட்-எ-அமிருக்குச் செல்லும்போது ஒழுங்காக முக்காடு அணிவதில்லை என அமைச்சு தெரிவித்திருக்கிறது. கடந்த வாரம் அமைச்சர் முகமது காலிட் ஹனாஃபி (Mohammad Khalid Hanafi) பேமியன் வட்டாரத்திற்குச் சென்றிருந்தார். பெண்கள் முக்காட்டை ஒழுங்காக அணிவதில்லை என்பதால் அவர்கள் அந்தப் பூங்காவுக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை […]

ஐரோப்பா

உக்ரைனின் சிறந்த போர் விமானி மரணம்

  • August 28, 2023
  • 0 Comments

உக்ரைனின் சிறந்த போர் விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆண்ட்ரி ப்பில்-ஷிக்கோவ் என்பவர் நடுவானில் நேர்ந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவரோடு சேர்த்து விமான ஊழியர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஊடுருவலின் தொடக்கக் காலத்தில், தலைநகர் கீவ் வான்வெளியில் நடைபெற்ற விமானச் சண்டையில் வீரதீரம் காட்டியவர் அவர் எனக் கீவ் குறிப்பிட்டது. அவர்கள் மூவரின் மரணம், வேதனையானது என்றும் ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும் உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது. அபாரமான திறமையும் அறிவும் படைத்த விமானி என்று […]

பொழுதுபோக்கு

‘தனி ஒருவன் 2’… இன்று மாலை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

  • August 28, 2023
  • 0 Comments

நடிகர் ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து கலக்கிய அந்த படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த கலக்கல் கூட்டணிக்கு ஹிப்ஹாப் தமிழா […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிக்கிய நபரிடம் பெருந்தொகை தங்கம்!

  • August 28, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் முன்லையில் பிரசன்னப்படுத்ததப்பட்டதை தொடரந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு உரிமம் அவசியமாகும். அவ்வாறு தங்க […]

ஆசியா முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கு வட கொரியா வெளியிட்ட அறிவிப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

வட கொரியா, நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த தொடங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் அதன் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நோய்ப்பரவல் தணிந்துவிட்டதால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்தது. வெளிநாட்டிலிருந்து திரும்புவோர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர். அது ஏற்கெனவே, ரஷ்யா, சீனா ஆகியவற்றுடனான விமானச் சேவைகளைத் தொடங்கிவிட்டது. வட கொரியாவின் தேசிய விமான நிறுவனமான Air Koryo மூவாண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக விமானச் சேவைகளைத் தொடங்கியது. 2020ஆம் […]