ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலைக்குள் கைதியின் சடலம் – எரிந்த நிலையில் மீட்கப்பட்டமையால் அதிர்ச்சி

  • August 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலை ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் கைதி ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலைக்குள் திடீரென தீ பரவியதாகவும், தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 40 வரையான கைதிகள் வெளியேற்றப்பட்டதன் பின்னரே தீயணைப்பு பணிகள் மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தீ அணைக்கப்பட்டது. அதன் முடிவில் கைதி ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – கத்தியால் குத்திக் கொண்ட பாடசாலை மாணவர்கள்

  • August 29, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மீல வெல்ட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இருவர் இடையே கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 25ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மீல வெல்ட் பிரதேசத்தில் உள்ள ஆட் ஃவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் 12 வயது மாணவன் ஒருவனை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்து […]

இலங்கை

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை வரும் சீன கப்பலால் சர்ச்சை!

  • August 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சீன ஆய்வுக் கப்பலான ‘சி யான் 06’ வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பலின் வருகை தொடர்பில் சீனத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது. சீன ஆய்வுக் கப்பலுடன் இணைந்து நாரா நிறுவனம் ஆய்வுகளை […]

ஐரோப்பா செய்தி

கொலையாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்!! ரிஷி சுனக்

  • August 28, 2023
  • 0 Comments

கொடூரமான கொலைகளைச் செய்பவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க பிரிட்டனில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படுத்தியுள்ளார். கொடூரமான கொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் அல்லது முன்கூட்டியே விடுதலை இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலைகளை செய்த கொலையாளிகளை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் அத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் சுனக் கூறினார். மிகக் குறைவான வழக்குகளைத் தவிர்த்து, மொத்தமாக நீதிபதிகள் ஆயுள் தண்டனை […]

செய்தி

சந்தேகம் காரணமாக ரைஸ் குக்கரால் தாக்கி காதலியை கொலை செய்த காதலன்

  • August 28, 2023
  • 0 Comments

சந்தேகம் காரணமாக காதலன் காதலியை கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பதிவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் வாடகை வீட்டில் நீண்ட நாட்களாக காதலர்களாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையே எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. குறித்த காதலன் காதலிக்கு வேறு உறவுகள் இருப்பதாக சந்தேகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் கடும் கோபமடைந்த காதலன் ரைஸ் குக்கரால் தாக்கியதாகவும் தகவல்கன் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலத்த காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் அரசு பாடசாலையில் அபாயா அணியத் தடை

  • August 28, 2023
  • 0 Comments

அரசு நடத்தும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா அணிவதை பிரான்ஸ் தடை செய்யும் என்று கல்வி அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்திய பிரான்ஸ், வளர்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்க போராடியது. 2004 ஆம் ஆண்டில், பாடசாலைகளில் அபாயா அணிவதைத் தடைசெய்தது […]

இலங்கை செய்தி

தமிழர்களின் பூர்வீகத் தண்ணிமுறிப்பு கிராமம் மீள் குடியேற்றப்படும்வரை போராடுவோம் – ரவிகரன்

  • August 28, 2023
  • 0 Comments

தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புபகுதியில், தொல்லியல் மற்றும், வனவளத் திணைக்களத்தால் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்கு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். குறித்த கள விஜயத்தின் பின்னர் […]

இலங்கை செய்தி

எனது சகோதரரின் ரொக்கெட் தனியார் முதலீடு – நாமல் எம்.பி

  • August 28, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் சமீபத்திய நிலவுப் பயணம் தொடர்பான விவாதங்களுக்கு பதிலளித்துள்ளார். மக்கள் பெரும்பாலும் தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் அதை தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் தன்னிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். “தனியார் துறை திட்டமாக எனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட், அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழு […]

இலங்கை செய்தி

இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் இந்தியர்கள் இருவர் கைது

  • August 28, 2023
  • 0 Comments

இந்தியாவை சேர்ந்த புக்கி சௌரப் சந்திரகர் மற்றும் அவரது உதவியாளர் ரவி உத்பால் ஆகியோர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சௌரப் சந்திரகர், தாவூத் இப்ராஹிம் என்ற இந்திய பாதாள உலகத் தலைவரின் உதவியுடன், இணையத்தில் சட்டவிரோதமான சூதாட்டத் தளத்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளிலும் பந்தயம் கட்டுவதற்கும் சட்டவிரோதமானது என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க […]

இந்தியா செய்தி

சக மாணவர்களிம் இஸ்லாமிய மாணவரை அடிக்க வைத்த ஆசிரியை!! இந்தியாவில் சம்பவம்

  • August 28, 2023
  • 0 Comments

இந்தியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவியை மற்ற மாணவர்களை தாக்கச் சொல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தால் இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முஸ்லிம் மாணவிக்கு 7 வயது, ஆசிரியர் கூறியதையடுத்து மாணவர்கள் சிலர் வந்து முஸ்லிம் மாணவியின் கன்னத்தில் அடித்த காட்சி வீடியோவில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் […]