இலங்கை

மன்னார்-இருவர் சுட்டுக் கொலை தொடர்பாக பிரதான சந்தேக நபரை தேடுதல் பணியில் விசேட அதிரடிப் படையினர்

  • August 29, 2023
  • 0 Comments

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் வகையில் மன்னார் மூர்வீதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் இடம் பெற்றுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதி உள்ளடங்களாக அப்பகுதியில் உள்ள […]

ஆசியா

இந்தோவில் ஹிஜாப் சரியாக அணியாத்தால் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை – ஆசிரியர் சஸ்பெண்ட்!

  • August 29, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம். இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார். 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. […]

இலங்கை

மன்னாரில் பயறு அமோக விளைச்சல் ;நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் காதர் மஸ்தான்

  • August 29, 2023
  • 0 Comments

விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினாலும், மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமும் மற்றும் காம காரர்கள் சொந்த பணத்திலும் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான பொருட்கள் வழங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் சுமார் 1600 ஹெக்டயர் நிலப்பரப்பில் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள நெல் வாயில்களில் மாற்றுப்பயிராக பயறு பயிரிடப் பட்டிருந்தது. குறித்த பயிர் செய்கையின் அறுவடையை கிராமிய பொருளாதார இராஜாங்க […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வானில் தோன்றும் நெருப்பு வளையம் : லைவ் டெலிகாட்ஸ் செய்ய தயாராகும் நாசா!

  • August 29, 2023
  • 0 Comments

அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது குறித்து ஓ (டுவிட்டர்) இல் பதிவிட்டுள்ள நாசா இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தோன்றும் என அறிவித்துள்ளது. இந்த அற்புதமான இயற்கை நிகழ்விற்கு நாசா ‘நெருப்பு வளையம்’ கிரகணம் எனப் பெயரிட்டுள்ளது. இந்த கிரகணம் வடக்கே ஓரிகானில் இருந்து தெற்கே டெக்சாஸ் நகருக்கு நகரும் எனவும் மக்கள் […]

ஐரோப்பா

லண்டனில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

  • August 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். அதேசமயம் […]

இலங்கை

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி : விலைக் குறையுமா?

  • August 29, 2023
  • 0 Comments

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (28.08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்ளூர் சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கில், மாநில வணிக (இதர) சட்டப்பூர்வ கழகம், முட்டைகளை இறக்குமதி செய்து உள்ளூர் சந்தைக்கு விடுவதற்கு முன்பு ஒப்புதல் […]

இலங்கை

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொண்ட 15 வயது சிறுமி : மறைக்க முயன்ற வைத்தியர்!

  • August 29, 2023
  • 0 Comments

15 வயது சிறுமியொருவர் குழந்தைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தை வைத்திய நிபுணர் ஒருவர் மறைக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வைத்தியர் இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைக்க முயன்றுள்ளார். குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய தாய் பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பெற்றெடுத்த  குழந்தை குறைந்த எடை கொண்ட குழந்தையாக இருந்துள்ளது. இதனால் குழந்தையை கராப்பிட்டி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு மாற்றுமாறு மேற்படி […]

பொழுதுபோக்கு

மித்ரனின் அடுத்த எதிரி யார் ?… ‘தனி ஒருவன் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • August 29, 2023
  • 0 Comments

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து நடித்திருந்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது. ஜெயம் ரவி மித்ரன் என்ற பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

இலங்கை

கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த நபர்

  • August 29, 2023
  • 0 Comments

கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ் ,நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த இளைஞனை கொலை செய்த நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய கத்தி […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் பட வெற்றியை முன்னதாகவே கணித்த விஜய்.. நெல்சன் நெகிழ்ச்சி

  • August 29, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் அவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். அவரது கடத்தல் மற்றும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஜினி எத்தகைய எக்ஸ்பீரியன்ஸ்களை சந்திக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியிருந்தது. இந்தப் படம் இயக்குநர் நெல்சனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. முன்னதாக அவரது இயக்கத்தில் […]