இலங்கை

எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 1, 2023
  • 0 Comments

எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலைத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்து புதிய விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனமானது, இந்த ஆண்டில் மாத்திரம் தொடர்ச்சியாக நான்கு முறை விலைக் குறைப்புகளை அறிவித்திருந்தது.

இந்தியா

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் […]

இலங்கை

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் […]

பொழுதுபோக்கு

நெருப்புடன் இயக்குநர்.. கங்குவா படத்தின் மிரட்டல் போஸ்டர் வெளியீடு

  • September 1, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா காம்பினேஷனில் உருவாகி வருகிறது கங்குவா படம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ என வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் […]

இலங்கை

வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  • September 1, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி […]

உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சினின் தண்டனை ஓராண்டாகக் குறைப்பு!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் எட்டு ஆண்டு சிறைத்தண்டனையை ஓராண்டாகக் குறைத்துள்ளதாக அரச வர்த்தமானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி, 2006 இல் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தாய்லாந்துக்குத் திரும்பினார். அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சிறைக்கு மாற்றப்பட்டார். முதல் நாள் இரவு, நெஞ்சுவலி மற்றும் […]

இலங்கை

அம்பாறையில் மாணவியிடம் மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு நேர்ந்த கதி!

  • September 1, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு..!

  • September 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13ம் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான […]

இலங்கை

QR முறைமை தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு!

தற்போதுள்ள தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (QR) முறை இன்று (செப். 01) முதல் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு விடையளிக்கும் வகையில் 2022 ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொழுதுபோக்கு

மறக்க முடியாத “சித்தார்த் அபிமன்யூ” தனி ஒருவன் 2 புதிய வில்லன் இவரா?

  • September 1, 2023
  • 0 Comments

நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்கள் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது தனி ஒருவன். 8 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் கேரியர் அவரது அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து மற்ற முன்னணி இயக்குநர்களின் டைரக்ஷனிலும் நடித்து தன்னை மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அவரது அண்ணன் […]