ஐரோப்பா

சாத்தான் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா : உச்சகட்டத்தை எட்டும் போர்!

  • September 2, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நிலைநிறுத்தியுள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி அமைப்பின் தலைவர்  யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  யூரி போரிசோவ்,  “சர்மட் ஏவுகணைகள் போர் கடமையில் வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 2018 இல் புடின் அறிவித்த பல மேம்பட்ட ஆயுதங்களில் சர்மட்டும்  ஒன்றாகும். பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சாத்தான் என அறியப்படுகிறது. இந்த சர்மட் […]

தென் அமெரிக்கா

சிலியில் பயணிகள்பஸ் மீது ரெயில் மோதி கோர விபத்து – எழுவர் பலி!

  • September 2, 2023
  • 0 Comments

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்நகரின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரெயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்சை வேகமாக வந்த ரெயில் சில மீட்டர்கள் தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 […]

பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்

  • September 2, 2023
  • 0 Comments

நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரரும், பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தனது 66 ஆவது வயதில் இன்று காலை சென்னையில், அவர் காலமானார். பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர். ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்.எஸ்.சிவாஜியை நடிக்கச் சொல்லி வலியுறுத்தியது நடிகர் பிரதாப். அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ […]

இலங்கை

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பணிப்புரை!

  • September 2, 2023
  • 0 Comments

தகுதிவாய்ந்த பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம்  மருந்து விநியோகத்தில் தற்போதுள்ள ஏகபோகத்துக்குப் பதிலாக போட்டியை உருவாக்கி, மருந்து தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ வழங்கல் பிரிவுக்கு சொந்தமான உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய […]

இலங்கை

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

  • September 2, 2023
  • 0 Comments

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி மூலம் 86,000 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அபிவிருத்திப் பணிப்பாளர்  உபுல் ரணவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம்  86,680 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். […]

இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கப்பல்!

  • September 2, 2023
  • 0 Comments

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று (01.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 163 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பலில் வருகை தந்துள்ள கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவின் சீனாவின் […]

இந்தியா

வரலாற்று சாதனை படைத்த இந்தியா : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்தியா எல்-01!

  • September 2, 2023
  • 0 Comments

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு இந்தியா தனது அடுத்த முயற்சியாக சூரியனை இலக்கு வைத்துள்ளது. இதன்படி ஆதித்தியா  L1  விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.50 இற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 4.5 ஆண்டுகள் பழமையான நட்சத்திரமான சூரியனை நெருங்க 04 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்படுவதுடன், சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் […]

இலங்கை

வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை!

  • September 2, 2023
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது எனவும், பாராளுமன்றமே இதற்கான இறுதி தீர்மானத்தை எடுக்கும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் முன்னிலையில் அவர் மேற்படி அறிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

  • September 2, 2023
  • 0 Comments

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அதன்படி, அனைத்து நிறுவனங்களும் ஓட்டுநர் உரிமம், மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாளச் சான்றிதழ்களையும் ஆன்லைனில் சரிபார்க்க வசதி செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு அடையாள ஆவணங்களின் டிஜிட்டல் சரிபார்ப்பை பல மாநிலங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்பில், புதிய எண் அல்லது அட்டை வழங்கப்படாது மற்றும் ஒரு நபருக்குச் சொந்தமான அனைத்து […]

இலங்கை

வாரிய பொல பகுதியில் கோர விபத்து – தந்தையும், மகளும் உயிரிழப்பு!

  • September 2, 2023
  • 0 Comments

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்களில் பயணித்த தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடையவர்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.