இலங்கை

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது இனவாதத்தை விதைப்பார்கள் – பிரசன்ன ரணதுங்க

  • June 2, 2023
  • 0 Comments

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும்,  அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் […]

வட அமெரிக்கா

சிப்பி உணவு தொடர்பில் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி

  • June 2, 2023
  • 0 Comments

கனேடியர்களுக்கு பிடித்த உணவான சிப்பி வகை உணவொன்றில் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் குறித்து உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி பரவிவருகிறது. இந்த விப்ரியோ […]

இலங்கை விளையாட்டு

இலங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி

  • June 2, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை […]

ஐரோப்பா

பெர்டியன்ஸ்கில் உள்ள துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் – 9 பேர் காயம்!

  • June 2, 2023
  • 0 Comments

பெர்டியன்ஸ்கில் உள்ள ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட துறைமுகத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் உள்ள அசோவ் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரம் இன்று (02) நண்பகலில் குறிவைக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி  விளாடிமிர் ரோகோவ் கூறினார். இந்த தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியாவில் “வி ஆர் டுகெதர் வித் ரஷ்யா” என்ற மாஸ்கோ சார்பு அமைப்பை வழிநடத்தும்  ரோகோவ், துறைமுகப் பகுதிக்கு அருகில் இருந்து சாம்பல் […]

இலங்கை

வடக்கில் மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்!

  • June 2, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு […]

ஆஸ்திரேலியா

காதலி கத்தியால் குத்திக் கொலை… தண்டனை குறித்து கூகுளில் தேடிய காதலன்!

  • June 2, 2023
  • 0 Comments

காதலியின் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்ற காதலன், உடலை குப்பை தொட்டியில் வீசி ஏறிந்ததுடன் கொலை குற்றத்திற்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூகுளில் தேடியுள்ளார். அவுஸ்திரேலியாவில் காதலன் ஜூன் சியோங் டான் அவரது காதலி கெல்லி ஜாங்கை 2021ல் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.காதலன் ஜூன் சியோங் டான் இந்த செயலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, தன்னுடைய காதலி மற்றும் 8 வயது மகனுடன் உணவருந்தி உள்ளார். அதன் பின் ஏற்பட்ட […]

ஐரோப்பா

ஒரேநேரத்தில் பல வகையான புற்றுநோய்களைக் கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனை குறித்து ஆய்வாளர்கள் கருத்து!

  • June 2, 2023
  • 0 Comments

ஒரேநேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களைக் கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனையானது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால் நோயறிதலை கண்டறிதல் மிகவும் இலகுவானதாக இருக்கும் என்றும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் சம்பந்தமான ஆயிரக்கணக்கான NHS நோயாளிகளை உள்ளடக்கிய சோதனையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. சோதனையில் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் உள்ள 6,238 பேர் கலந்துக்கொண்டதுடன்,  அவர்களில் 323 பேருக்கு புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 244 […]

மத்திய கிழக்கு

மகனை கொன்று தலையை சமைத்து சாப்பிட்ட தாய்! சொன்ன அதிர்ச்சியளிக்கும் காரணம்

  • June 2, 2023
  • 0 Comments

எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மனகை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன்(29) என்பவர் தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் […]

மத்திய கிழக்கு

சூடானின் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்த அமெரிக்கா!

  • June 2, 2023
  • 0 Comments

சூடானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி  அமைதியை சீர்குலைத்தமைக்காக பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அப்தேல் பத்தாஹ் அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்தனர் என மனித […]

மத்திய கிழக்கு

சூடான் உள்நாட்டு போர் ; பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!

  • June 2, 2023
  • 0 Comments

சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. கிட்டத்தட்ட இந்த போரில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகிறது. இந்நிலையில், கார்ட்டூமில், அல்-மய்கோமாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் […]

You cannot copy content of this page

Skip to content