இலங்கை

கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் நாட்டை விட்டு வெளியேற்றம்! நோயாளர்கள் பாதிப்பு

இரத்தினபுரி, கஹாவத்தை ஆதார வைத்தியசாலையின் கண் வைத்தியர் உரிய அறிவித்தல் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் கைவிடப்பட்டுள்ளனர். அதன்படி, மருத்துவர் சென்றதால் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நாளாந்தம் 150 – 100 கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வாரத்தின் ஆறு நாட்களும் கண்சிகிச்சை ‘கிளினிக் தினங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்டுள்ள கடும் அசௌகரியம் காரணமாக மாற்று கண் வைத்தியரை கஹவத்தை வைத்தியசாலைக்கு கொண்டு […]

இந்தியா உலகம்

G20 அமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க ஒன்றியம்.. (Video)

  • September 9, 2023
  • 0 Comments

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி […]

இலங்கை

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை!

  • September 9, 2023
  • 0 Comments

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (08.09) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்,  திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி,  உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய […]

பொழுதுபோக்கு

’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் அடுத்த வாரம் வரும் – அனிருத்

  • September 9, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடலான ’நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அடுத்த சிங்கிள் பாடல், இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் ரிலீஸ் விழா உள்பட ப்ரமோஷன் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த […]

இலங்கை

கட்டுநாயக்கவில் போலி விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது

  • September 9, 2023
  • 0 Comments

போலியாக தயாரிக்கப்பட்ட விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு […]

இலங்கை

திருகோணமலையில் பெரும் பரபரப்பு – விகாரைக்கான பதாகையால் அதிர்ச்சி

  • September 9, 2023
  • 0 Comments

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகை இன்று (09) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பதாகை நடப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் பொலிசார் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் செனல்-04 தான் பொறுப்பேற்க வேண்டும்!

  • September 9, 2023
  • 0 Comments

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது குறித்துபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை  பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மதிப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சனல் -04ஆல் செய்யப்படும் அடிப்படையற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான கூற்றுக்களால் எழும் எந்தவொரு […]

உலகம்

மொரோக்கோ நிலநடுக்கம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 600ஐக் கடந்தது!

  • September 9, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. மொரோக்கோவின்   ஹை அட்லஸ் மலைத்தொடர்  பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]

ஆசியா

சிங்கப்பூர்- அமைச்சர் ஈஸ்வரனை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  • September 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஈஸ்வரன் (61). அந்த நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் வருகிற 18ம் திகதி சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவரை எம்.பி. பதவியில் […]

உலகம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் இந்தியா வருகை!

  • September 9, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார். ஜி-20 உச்சி மாநாடு இன்று (09.09) மற்றும் நாளை இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். அந்தவகையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் வருகை தந்துள்ளார்.