வட அமெரிக்கா

அமெரிக்கா-ஈரான் இடையே கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஒப்பந்தம்

  • September 12, 2023
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பகை உணர்வு பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் கைது செய்து வைத்துள்ள 5 அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதைப்போல அமெரிக்காவும் கைது செய்து வைத்துள்ள 5 ஈரானிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தென்கொரியாவில் இருந்து சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கத்தாருக்கு பரிமாற்றம் செய்யவும் அமெரிக்கா […]

இலங்கை

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

  • September 12, 2023
  • 0 Comments

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நீலாப்பொல கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த டி.டி.சில்வா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இடத்திற்கு கூலித்தொழிலின் நிமிர்த்தம் சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன குறித்த இடத்திற்கு விஜயம் […]

பொழுதுபோக்கு

சாண்டியின் “கிப்ட்” படத்தின் முதல் தோற்றம்.. இதோ

  • September 12, 2023
  • 0 Comments

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. பிரேமம், நேரம் ,கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர், அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். கிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். அல்போன்ஸ் புத்திரன், இளையராஜா, சாண்டி என ஒரு வித்தியாசமான காம்போவில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கோவை சரளா, சஹானா சர்வேஷ், […]

இலங்கை

இலங்கையில் தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்!

  • September 12, 2023
  • 0 Comments

தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக, பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்வதற்காக, பாடத்துறை அமைச்சர் மூலம் பாராளுமன்றத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு “தேசிய மகளிர் ஆணையம்” என்ற தலைப்பில் ஒரு சுயாதீன ஆணையத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இலங்கை

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

  • September 12, 2023
  • 0 Comments

சுங்க வரி விலக்குக்கு உட்பட்டு புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொடர்புடைய சுங்க வரிகள் இல்லாமல் புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 30,000 […]

பொழுதுபோக்கு

புஷ்பா 2 வெளியாகும் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது…

  • September 12, 2023
  • 0 Comments

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு புஷ்பா படம் வெளியானது. படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘புஷ்பா -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியின் புதிய லுக்.. பார்க்கவே பயங்கரமா இருக்கு…

  • September 12, 2023
  • 0 Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக், பிரபல ஒளிப்பதிவாளர் நடராஜ், நடிகை மம்தா மோகன் உள்ளட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் […]

இலங்கை

நீதிமன்றில் ஆஜராகுமாறு MP எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை

  • September 12, 2023
  • 0 Comments

நீதிமன்றில் எதிர் வரும் 14ம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரதசேவை!

  • September 12, 2023
  • 0 Comments

புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12.09) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “தொழிற்சங்க பயங்கரவாதம்’ காரணமாக சிக்கலில் […]

ஆசியா

சீனாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை : 07 பேர் பலி!

  • September 12, 2023
  • 0 Comments

சீனாவின் பலப்பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத மழைக்காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைகுய் எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது 08 நாட்களுக்கு முன்பு சீனாவை தாக்கியது. இந்த புயலைத் தொடர்ந்து தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக யூலின் நகரின் பெரும்பாலான பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் இடைவிடாத மழை நிலச்சரிவுக்கும் வழிவகுத்துள்ளது. இதுவரை 115 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.   இதனால் பலப்பகுதிகளில் அவசர எச்சரிக்கை […]