இலங்கை

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட ஆங்கில ஆசிரியர் கைது

  • September 14, 2023
  • 0 Comments

கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு இளம் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்பு பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குறித்து பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது […]

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளிநாட்டு விமானிகளுக்கு தொழில்வாய்ப்பு!

  • September 14, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கிட்டத்தட்ட 60 விமானிகள் சேவையில் இருந்து விலகி வெளிநாடு சென்றனர். இந்நிலையில் தற்போது விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அதன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு

லெபனானில் அகதிகள் முகாமில் வெடித்த வன்முறை; 6 பேர் பலி

  • September 14, 2023
  • 0 Comments

லெபனான் நாட்டில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளத அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார். அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7ம் திகதி […]

வட அமெரிக்கா

பிரதமர் ட்ரூடோவின் காணொளியை பயன்படுத்தி மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • September 14, 2023
  • 0 Comments

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காணொளியை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி 11000 டொலர்களை இழந்துள்ளார். முதலீட்டு திட்டமொன்றில் பணம் முதலீடு செய்துள்ளதாகவும் இதில் லாபமீட்டியதாகவும் பிரதமர் கூறுவது போன்று காணொளி வெளியிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் முதலீடு செய்யுமாறு பிரதமர் பரிந்துரை செய்வது போன்றும் இந்த காணொளியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. டீப் பேக் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறு மோசடியான காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த முதலீட்டு திட்டத்தில் உலகின் […]

இலங்கை

திருகோணமலையில் போதை பொருளுடன் சிக்கிய நபர்!

  • September 14, 2023
  • 0 Comments

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணிகத்தின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5 கிரேம் 700 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய்- முதலாம் கொலனியில் வசித்து வரும் அப்துல்லாஹ் முகமட் ரிஹான் […]

இலங்கை

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

  • September 14, 2023
  • 0 Comments

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர். மேலும் குறித்த மீனவர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க […]

இலங்கை

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

  • September 14, 2023
  • 0 Comments

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று(14) மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

அறிந்திருக்க வேண்டியவை அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா

வானில் நடந்த அதிசயம்.. – நேரில் பார்த்து பீதியில் உறைந்த மக்கள்

  • September 14, 2023
  • 0 Comments

இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் தோன்றிய மர்ம ஒளியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் சடுதியாக ஒரே நேர்கோட்டுக்கு வந்து திடீரென மறைந்துள்ளன.இதன்போது, கடும் காற்றும் வீசியதுடன், மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஒளிகள் வானில் டாச் லைட் (Torchlight) அடிப்பதைப்போன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட கார்கள் நுழைவதை தடை செய்த எஸ்டோனியா

  • September 14, 2023
  • 0 Comments

ரஷ்ய உரிமத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை இனி நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என எஸ்டோனியா முடிவு செய்துள்ளது. ரஷ்ய-பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவதைத் தடைசெய்யும் முடிவை எஸ்டோனியாவின் வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா அறிவித்தார். ரஷ்யர்களுக்கு நாட்டில் வரவேற்பு இல்லை என்றும், ரஷ்ய உரிமத் தகடுகளைக் கொண்ட கார்கள் எஸ்டோனியாவுக்குள் நுழைவதைத் தடைசெய்வது சரியானது என்றும் அமைச்சர் சாக்னா கூறினார், அதற்கமைய, ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவதை எஸ்டோனியா மறுக்கும். உக்ரைன் வெற்றி பெறும் […]