இலங்கை

60 மருந்துகளின் விலைகள் குறைப்பு : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • June 15, 2023
  • 0 Comments

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 60 மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற 5 இலங்கை பொலிஸார் மாயம்!

  • June 15, 2023
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு!

  • June 15, 2023
  • 0 Comments

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,  அதற்கமைய  தமது பரிந்துரைகள் ஜூலை முதல் வாரத்தில் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்புக்குள் எம்.வி.எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தின் காரணமாக இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் […]

வட அமெரிக்கா

கனடாவில் விலங்குகள் மீதான பரிசோதனைகளுக்கு தடை

  • June 15, 2023
  • 0 Comments

கனடாவில் விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி செய்யும் பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.எலி, நாய், மற்றும் முயல் போன்ற விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் இரசாயன பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரசாயனப் பொருட்களினால் மனிதருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இவ்வாறு விலங்குகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.இந்த பரிசோதனைகளின் மூலம் விலங்குகள் மீது மிதமிஞ்சிய அளவில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக மிருக நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் கனடாவில் […]

உலகம்

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

பிரித்தானியாவில் நொட்டிங்காமில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை நொட்டிங்காமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் .65வயது நபரும் உயிரிழந்தார். இந்த தாக்குதல்கள் தொடர்பில் 31வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நொட்டிங்காம் பல்கலைகழகத்தில் நேற்று அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட இரு மாணவர்களினதும் தந்தைமார் பெருந்துயரத்துடன் உரையாற்றியுள்ளனர். அங்கு இருந்த அனைவரினதும் மத்தியிலும் உரையாற்றிய ஓமலே குமாரின் தந்தை சஞ்சோய் மாணவர்கள் ஒருவரை […]

ஐரோப்பா

கைப்பற்றிய பிராந்தியங்களில் தேர்தல் நடத்தவுள்ள ரஷ்யா

  • June 15, 2023
  • 0 Comments

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இலங்கை

14 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை – காதலன் உட்பட மூவர் கைது

  • June 15, 2023
  • 0 Comments

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கி​ழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற சிறுமியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச்சென்று அவருடைய காதலன் என கூறப்படும் 24 வயதுடைய ​இளைஞனும் அவரின் நண்பர்களான 33 மற்றும் 28 வயதுடைய நபர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ​வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

ரேஷ்மா பசுபுலேட்டியின் உதட்டுக்கு என்ன ஆனது? அவரே இரகசியத்தை வெளியிட்டார்

  • June 15, 2023
  • 0 Comments

பாடி ஷேமிங் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் வருகிறது. மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து இருந்தார் . இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்றான […]

ஆசியா

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

  • June 15, 2023
  • 0 Comments

வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியது. அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கொரிய இராணுவம், தென் கொரிய-அமெரிக்க நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதன் ஆயுத சோதனை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாகக் வடகொரியா தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் […]

மத்திய கிழக்கு

துருக்கியில் நிலத்தகராறில் 8 பேர் உயிரிழப்பு !

  • June 15, 2023
  • 0 Comments

துருக்கியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று தென தியார்பாகிர் மாகாணத்தில் விவசாயக் காணித் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் குர்திஷ் இனத்தவர்களைப் பெரும்பான்மையகாக் கொண்ட தென தியார்பாகிர் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சர்ச்சைக்குரிய வயல்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மேற்படி வயல் பகுதி சுமார் 200,000 சதுரமீற்றர்கள் (50 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டது என மாகாண […]

You cannot copy content of this page

Skip to content