இலங்கை

மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தி விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம்

  • September 22, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் ஒன்றியத்தின் அதிகாரசபையின் தலைவர் அ.ரமேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். ”பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே”, ”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி […]

இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மீண்டும் கட்டளை பிறப்பித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

  • September 22, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (22) கட்டளை பிறப்பித்தது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20ம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா […]

இலங்கை

தீவிரமடையும் நிபா வைரஸ் : கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்- சஜித் பிரேமதாச

  • September 22, 2023
  • 0 Comments

“நிபா வைரஸ்” இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

  • September 22, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ் வரி உயர்வு இன்று (செப்.,22) அமலுக்கு வருகிறது. எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கை

அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட திருகோணமலை சுகாதார உத்தியோகத்தர்கள்

  • September 22, 2023
  • 0 Comments

வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று (22) மதியமளவில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். திருகோணமலை வைத்தியசாலையில் நிலவிவரும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அகில இலங்கை ரீதியாக இடம்பெறும் இப்போராட்டத்தை அகில இலங்கை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் […]

இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • September 22, 2023
  • 0 Comments

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், நாயுடு தாக்கல் செய்த எஃப்ஐஆர் ரத்து மனு மீதான விசாரணை இன்று மதியம் 1:30 […]

பொழுதுபோக்கு

Leo இன்று போஸ்டர் கிடையாது… ஆனால் ஒரு சப்ரைஸ் இருக்கு….

  • September 22, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. லியோ ரிலீஸாகும் வரை கடைசி 30 நாட்களில் தினமும் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார். அதன்படி, இதுவரை விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, இன்று இன்னும் மாஸ்ஸான அப்டேட்டை வெளியிட உள்ளதாம். லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதாவது படம் வெளியாவதற்கு 30 நாட்கள் முன்பாக தினமும் அப்டேட் வெளியாகும் […]

இலங்கை

திருகோணமலை- ஒன்றுக்கொன்று மோதிய மோட்டார் வண்டிகள் – ஒருவர் பலி,ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

  • September 22, 2023
  • 0 Comments

திருகோணமலை -சேறுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேருவில-காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் அவருடன் சென்ற சக நண்பரை வீட்டுக்கு முன் இறக்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சக நண்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் […]

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டத்திற்காக கோவை வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர்

  • September 22, 2023
  • 0 Comments

திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதனை தொடர்ந்து காரில் ஏறி கட்சியினர்களுக்கு கையசைத்தவாறு ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட […]

ஆசியா

தாய்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்களால் கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்!

  • September 22, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருப்பது அனைவரும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. தாய்லாந்தின் சிகாகெட் மாகாணத்தில் குன் ஹான் மாவட்டத்தில் இந்த புத்தர் கோவில் அமைந்துள்ளது. வாட் பா மஹா செடி கேவ் என்று அழைக்கப்படும் இக் கோவில் கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கொண்டு […]