பொழுதுபோக்கு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பரபரப்பான அப்டேட்டை வெளியிட்டார் ஜி.வி.பிரகாஷ்!

  • September 23, 2023
  • 0 Comments

தனுஷ் தலைசிறந்த தமிழ் நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பன்முகத் திறமை கொண்ட இவர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். தனுஷின் அடுத்த வெளியீடாக இருக்கும் பிரம்மாண்ட போர் ஆக்‌ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’.. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று, ‘கேப்டன் மில்லர்’ பாடலின் சூடான அதிகாரப்பூர்வ புதுப்பிப்பைப் பகிர்ந்துகொண்டார் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார். கபேர் வாசுகி எழுதிய திரைப்படத்தின் […]

இலங்கை

இலங்கையில் இம்மாதத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கையில் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 2000 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்தில் 2003 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முன்னைய மாதங்களை விட அந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என சுகாதார திணைக்களம் கணித்திருந்தது. இருப்பினும்  இந்த  மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. […]

வட அமெரிக்கா

கனடா- வான்கூவரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி!

  • September 23, 2023
  • 0 Comments

கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். அத்துடன் இந்த சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

இலங்கை

ஹரக் கட்டா தப்பிச்செல்ல முயற்சி: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

  • September 23, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி, குறித்த இருவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தேகநபர்களுடன் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டா […]

இலங்கை

மாத்தறை பிரதேசத்தில் பாண் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 23, 2023
  • 0 Comments

மாத்தறையில் பாண் ஒன்றை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது. குறித்த பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர் அதே கடையில் இரண்டு பாண்களை வாங்கினார் காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஒரு பாணை வெட்டி குழம்புடன் சாப்பிடும்போது குறித்த பீடியை பார்த்தார்.முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கி பார்த்ததில் அது பீடி என தெரியவந்துள்ளது.

இலங்கை

பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர்  லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு கிலோ பால் பவுடருக்கு தற்போது விதிக்கப்படும் 650 ரூபாய் வரியை நீக்கினால், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட்டை 600 ரூபாய்க்கு கொடுக்கலாம். கடந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வாயில் மனித உடல் எச்சத்துடன் சுற்றித் திரிந்த 14 அடி ராட்சத முதலை!

  • September 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் மனித உடல் எச்சங்களுடன் சுற்றித் திரிந்த 14 அடி முதலையை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா கால்வாயில் மிகப்பெரிய முதலை ஒன்று உயிரற்ற மனித உடலை தன் வாயில் கவ்விக் கொண்டு சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிளியர்வாட்டருக்கு தெற்கே 4 மைல் தொலைவில் உள்ள சிறிய சமூகமான லார்கோ(Largo) குடியிருப்பு வீதியில் 14 அடி முதலை ஒன்று மனித உடல் எச்சங்களை தாடையில் கவ்வியபடி சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது.இதையடுத்து உடனடியாக […]

பொழுதுபோக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் அறிவிக்கப்பட்டது…

  • September 23, 2023
  • 0 Comments

பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், […]

இலங்கை

பம்பலபிட்டியில் ஏற்பட்ட சூறாவளி : வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

கொழும்பில் நேற்று (22.09) பிற்பகல் கடும் மழை மற்றும் காற்றுடன் பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று போன்ற நிலை ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காற்று  டயகோபா மேகம் என அழைக்கப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலில் இருந்து நிலத்தை நோக்கி நகர்ந்த இந்த புயலானது பின்னர் எவ்வாறான ஒரு தோற்றத்தை பெறுகிறது என்பதை திணைக்களம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த புயல் நிலைமை காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரைத் தகடுகள் உடைந்தன.

இலங்கை

தோட்ட தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க நடவடிக்கை!

  • September 23, 2023
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் […]