இலங்கை

கணவனை கொலை செய்த மனைவி: வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 24, 2023
  • 0 Comments

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜிதபுர பகுதியில் நேற்று (23) இரவு கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவி கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மகஸ்தோட்ட, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இறந்தவர் வீட்டில் குடிபோதையில் இருந்ததாகவும், பணி முடிந்து இரவு மனைவி வீடு திரும்பியதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு இறந்தவர் தனது […]

இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனை வட்டியுடன் செலுத்திய இலங்கை!

  • September 24, 2023
  • 0 Comments

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும்  இலங்கை மீள செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை (21.09) 50 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகையின் கடைசி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும், வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும்  பங்களாதேஷுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இலங்கை செப்டம்பர் 02, 2023 அன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்,, ஆகஸ்ட் 17, 2023 அன்று 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் முன்னதாக […]

இலங்கை

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன்(Photos)

  • September 24, 2023
  • 0 Comments

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ்பெற்ற உலக புகழ் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார். பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணனனின் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு ரசிகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சந்தோஸ் நாராயணனுடன் […]

பொழுதுபோக்கு

இவருக்கு வயசே ஏறாதா? இன்னும் அப்படியே இருக்காரு…. சிம்புவின் ஸ்டைல் லுக்

  • September 24, 2023
  • 0 Comments

கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி […]

இலங்கை

திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து ஆளுநர் செந்தில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் -இம்ரான் எம்.பி

  • September 24, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து எடுத்த ஒரு தலைபட்சமான முடிவு இம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் உடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முருகல்நிலை தொடர்பாகவும், அது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரம் : கரூவூலத்திற்கு கிடைத்த தொகை!

  • September 24, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால கொடுப்பனவாக கருவூலத்திற்கு 890,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்தினால் கடற்பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்காக  கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு  வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் சில […]

பொழுதுபோக்கு

நடுரோட்டில் முதலிரவு காட்சி.. ரகசியத்தை கூறிய ஹேமா

  • September 24, 2023
  • 0 Comments

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார். சமீபத்தில் சீரியல் நடந்த சில காட்சிகள் பற்றிய விசயங்களை பகிர்ந்துள்ளார். பேட்டியில், முதலிரவு காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்த அனுபவம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அந்த முதலிரவு காட்சியில் நடந்த ஒரு ரகசியம் மக்களுக்கு தெரியாது. நீங்கள் சொல்லுங்கள் அந்த காட்சி எங்கு எடுத்திருப்பார்கள் என்று ஹேமா தொகுப்பாளினியை கேட்க, ஏதாது ரூமில் தான் என்று கூறினார். அதற்கு ஹேமா, […]

இலங்கை

புல்மோட்டை பகுதியில் அராஜகத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு

  • September 24, 2023
  • 0 Comments

பிக்கு ஒருவர் டோசர் இயந்திரங்களைக் கொண்டு தனது சகோதரனுடன் இணைந்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பவம் ஒன்று புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் இணைந்து புல்மோட்டை பகுதியில், முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக அத்துமீறி அபகரித்து, அங்கே டோசர் இயந்திரங்களை கொண்டு காணிகளை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டு […]

ஐரோப்பா

தன் 33ஆவது வயதில் ஆக்ஸ்போர்டில் சேர்ந்த ஹாரிப்பாட்டர் புகழ் நடிகை!

  • September 24, 2023
  • 0 Comments

ஹரிபார்ட்டர் புகழ் எம்மா வாட்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக ஹாரிபாட்டர் படத்தில் அறிமுகமானவர் எம்மா வாட்சன்.அதன் பின்னர் ஹாரிபாட்டர் வரிசை படங்கள் மட்டுமன்றி பிற படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார். பிரான்சில் பிறந்த இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டில் லிட்டில் வுமன் படத்தில் நடித்த எம்மா, அதன் பின்னர் 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு […]

இலங்கை

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி : இருவர் பலி!

  • September 24, 2023
  • 0 Comments

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (24.09) காலை இடம்பெற்றுள்ளது. இதில் ஆராச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த, யாழ்ப்பாணம் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக […]