இலங்கை

ஜசீரா ஏர்வேஸ் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு

  • September 28, 2023
  • 0 Comments

ஜசீரா ஏர்வேஸ் (Jazeera Airways) கொழும்பில் தமது விமான சேவையை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது. புதிய ஏர்வேஸ் கொழும்பிற்கு தினசரி விமானங்களை இயக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஜசீரா ஏர்வேஸ் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாகும். இது 2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் கொழும்புக்கு புறப்பட்டது. அதிக தேவை காரணமாக, ஜசீரா ஏர்வேஸ் மீண்டும் தங்கள் தினசரி சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் விசா கட்டணங்கள் – வெளியான முழு விபரம்

  • September 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியே இருந்து […]

இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக பணிப்புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்  45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் : வரவு செலவு திட்டத்தில் தீர்வு!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினைகளுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில தீர்வுகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சும், நிதி அமைச்சரும் செயற்படுவதாகவும், இவ்வாறான நிலையில் சில இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  வைத்தியர்கள் நாட்டை […]

இலங்கை

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • September 28, 2023
  • 0 Comments

யாழில் 08 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (17.09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வழக்கை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகை  மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது. சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் […]

இலங்கை

யாழில் அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள்… படு மோசமான செயல்கள் அம்பலம்

  • September 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் சொந்த வாகனங்கள் இல்லாத மக்கள் முச்சக்கர வணிடிகளில் பயணத்தை மேற்கொள்ள அச்சமடையும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகமாக உள்ளன. ஒரு சில சாரதிகள் மனசாட்சி என்பதே இல்லாமல் பணம் வசூலிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில், யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீட்டர் பொருத்தப்பட்டால் பயணிக்கும் மக்களுக்கு கட்டணம் அதிகளவில் வராது. […]

இந்தியா

விநாயகரை குளத்தில் கரைக்க சென்ற 3 சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த கதி!

  • September 28, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைத்த போது, நால்வர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 18 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பின்பு, விநாயகர் […]

இலங்கை

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் !

  • September 28, 2023
  • 0 Comments

தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் நில்வள, குடா, ஜின் கங்கைகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால், குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நில்வள கங்கைக்கு அருகிலுள்ள கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]

இலங்கை

இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி!

  • September 28, 2023
  • 0 Comments

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வாகன இறக்குமதியாளர்கள். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் 500kw வரையிலான மின்சாரம் அல்லது 3000CC வரையிலான பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்களின் (PEHV) இறக்குமதிக்கு CIF மதிப்பின் மீது பூஜ்ஜிய சுங்க வரி விதிக்க அமைச்சரவைக்கு  குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால், பொருளாதாரம், […]

வட அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

  • September 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் கனடாவில் இந்த ஆண்டு ஜூனில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றிய அதிகாரப்பூர்வ […]