இஸ்ரேல் போர் : பிரெஞ்சு மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக எட்டு பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பதினெட்டாக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் குழந்தைகளும், சிறுவர்கள் உள்ளதாகவும் பிரதமர் Elisabeth Borne இத்தகவலை வெளியிட்டார்.