இலங்கை

யாழ் – துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம்;இளைஞர் ஒருவர் படுகாயம்

  • October 14, 2023
  • 0 Comments

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சுஜீதரன் (31) என்ற இளைஞரே வாள் வெட்டு காயங்களிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். முன்பகை காரணமாகவே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த நெல்லியடிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா விளையாட்டு

இந்தியா -பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பை போட்டி… ரசிகர்களால் நிறைந்துள்ளஅகமதாபாத்!

  • October 14, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் 12.30 மணிக்கு உலகக் கோப்பை தொடருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங், அர்ஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இந்த போட்டியைக் காண அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என பல […]

பொழுதுபோக்கு

அடேங்கப்பா…. லியோ படத்திற்கு இன்றும் எத்தன பிரச்சினை வரப்போகுதோ….

  • October 14, 2023
  • 0 Comments

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஐமேக்ஸ் ப்ரீமியர் காட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ரசிகர்கள் ஐமேக்ஸ் திரையரங்கில் லியோ வெளியாகாத நிலையில், பணம் ரீஃபண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்களையும் பதிவிட்டு வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில் இன்னும் 5 நாட்களில் பல பிரச்சினைகளை சந்தித்துளள்து. 1. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனிருத் இசையில் லியோ […]

அறிந்திருக்க வேண்டியவை

178 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ள அதிசய சூரிய கிரகணம் – இன்று பார்வையிடலாம்

  • October 14, 2023
  • 0 Comments

சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது. நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ […]

செய்தி

திருகோணமலையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

  • October 14, 2023
  • 0 Comments

திருகோணமலை – மட்கோ பகுதியில் மன உளைச்சல் காரணமாக ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயிலுடன் மோதியதாகவும் தெரியவருகிறது. இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது . போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

  • October 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யுவதி

  • October 14, 2023
  • 0 Comments

இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்குச் செல்வதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் […]

வாழ்வியல்

லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்

  • October 14, 2023
  • 0 Comments

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். தீமைகள் லிப்ஸ்டிக் […]

ஆசியா

அதிரடிச் சோதனையைத் தொடங்கிய இஸ்ரேலிய இராணுவம்

  • October 14, 2023
  • 0 Comments

காஸா வட்டாரத்தில் இஸ்ரேலியத் துருப்புகள், இஸ்ரேலியத் துருப்புகள், அதிரடிச் சோதனைகளைத் தொடங்கியுள்ளன. அங்குள்ள பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் ஒழிக்கவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பிணை பிடிக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கத் தேவையான தடயங்களைத் தனது துருப்பினர் சேகரித்துள்ளதாகத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. ஹமாஸ் இயக்கத்தவரால், இஸ்ரேலியர்களும் வெளிநாட்டவருமாகச் சுமார் 150 பேர் பிணை பிடிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காஸா வட்டாரத்தின் தென் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

  • October 14, 2023
  • 0 Comments

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது. முன்னதாக 2 முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகைதுறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.