உலகம்

இஸ்ரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை வழங்கும் Orange தொலைத்தொடர்பு நிறுவனம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆன நிலையில், இஸ்ரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என Orange தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் உறவுகளுடன் தொலைபேசியூடாக உரையாக இந்த இலவச சேவையினை Orange நாளை திங்கட்கிழமை முதல் வழங்குகிறது. ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை 15 பிரெஞ்சு மக்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே இந்த இலவச தொலைபேசி […]

இலங்கை

யாழில் கப்பம் பெறும் கும்பலை கைது செய்ய உத்தரவு!

  • October 15, 2023
  • 0 Comments

யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாண பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (15.10) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் விவசாயிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட விவசாயிகள் தமது பயிர்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரும்போது, […]

இலங்கை

திருகோணமலையில் விவசாய நிலங்கள் பூஜா பூமி எனும் பெயரில் பௌத்த பிக்குகளினாலும் ஆக்கிரமிப்பு : மீனவர்கள்: விசனம்

திருகோணமலை-தென்னமரவாடி கடற்பகுதியில் பிற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அக்கிராம மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர். தென்னமரவாடி கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். வெளி இடங்களில் இருந்து வருகின்ற மீனவர்கள் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தியும், கூடுகளைக் கட்டியும் மீன் பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதோடு தமக்கான கடல்வளத்தை தமது வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் […]

இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 15 இந்திய மீனவர்கள் கைது..

  • October 15, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்படை […]

இலங்கை

பெண்னொருவரை தாக்கிய தம்பதியினர் கைது

கந்தானையில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரும் அவரது மனைவியும், பெண் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொழுதுபோக்கு

லிப் லாக் மழையில் நானியை கறைய வைத்த மிருணாள்!! டீசரே இப்படினா படம் எப்படி இருக்கும்?

  • October 15, 2023
  • 0 Comments

தசரா படத்தில் மிரட்டலான தோற்றத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க நானி நடித்த நிலையில், மீண்டும் ஒரு க்யூட்டான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகி விட்டார். ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தாவின் காதலராக சில சீன்களே வந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை இன்றளவும் பிடித்துள்ளார் நானி. அவர் நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்துக்கு இந்தியா முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சீதா ராமம் படத்தில் ராணி போல வந்த மிருணாள் தாகூர் […]

பொழுதுபோக்கு

‘விடாமுயற்சி’ சூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் … கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

  • October 15, 2023
  • 0 Comments

நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலின் உதவியாளராக 1999ம் ஆண்டு வாழ்க்கையைத் தொடங்கியவர் மிலன். இவர் ‘சிட்டிசன்’, ‘தமிழன்’, ‘ரெட்’, ‘வில்லன்’ மற்றும் ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். கடந்த 2006ம் ஆண்டு ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் மிலன் கலை இயக்குநராக அறிமுகமானார். ‘பில்லா’,’ஏகன்’, ‘வேட்டைக்காரன்’,’வேலாயுதம்’,’வீரம்’, ‘வேதாளம்’,’விவேகம்’,’ சாமி 2′ உள்பட 30க்கும் மேற்பட்ட […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது : படகுகளும் பறிமுதல்!

  • October 15, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகுகள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞர்கள் இருவர் கைது

  • October 15, 2023
  • 0 Comments

நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,முல்லைத்தீவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் நேற்று (14.10.2023) சட்டவிரோத கசிப்பு […]

இலங்கை

சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!

  • October 15, 2023
  • 0 Comments

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்தவில் வசிக்கும் 134 குடும்பங்களும், மஹகந்த பிரிவில் 23 குடும்பங்களும், மேல் மகல்தெனிய பிரதேசத்தில் 84 குடும்பங்களும்,   மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான […]