பிரான்சில் யூத எதிர்ப்பாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரிப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்சில் இந்த மத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. Fresnes நகரில் உள்ள பாடசாலையின் சுற்று மதிலில் Swastikas இலட்சணைகள் வரையப்பட்டுள்ளன.சர்வதிகாரி ஹிட்லரின் பெயரும் எழுதப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை காலை இவை கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினருக்கு இடையே மோதல் ஆரம்பித்ததன் பின்னர் பிரான்சில் யூத எதிர்ப்பாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.