மத்திய கிழக்கு

ஹமாஸை பூமியிலிருந்து முற்றிலும் துடைத்தெறிவோம்… இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு!

  • October 17, 2023
  • 0 Comments

ஹமாஸை இந்த பூமிப்பந்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 7ம் திகதி முதல் நடந்துவருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் வாசிகள் கொல்லப்பட்டதாகவும், 199 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது. இதன்காரணமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 2,750க்கும் […]

இலங்கை

யாழ்.பல்கலையில் உள்ள முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

  • October 17, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் , யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , தூபியை அமைக்க பெறப்பட்ட , செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள் , தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான […]

இலங்கை

இலங்கையில் 4.2 மில்லியன் ரூபாய் மோசடி – பலரை ஏமாற்றிய பெண் கைது

  • October 17, 2023
  • 0 Comments

இலங்கையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து அவர கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் 4.2 மில்லியன் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாணந்துறை பகுதியில் வைத்து நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைதான பெண்ணுக்கு எதிராக இதுவரை 06 முறைப்பாடுகள் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்த ஐ.நா

  • October 17, 2023
  • 0 Comments

இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தற்போது வரை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, ஐநா கூட்டமைப்பில் தீர்மானத்தை கொண்டுவந்தது. ஆனால் அந்த தீர்மானத்தை ஐநா நிராகரித்து விட்டது. ரஷ்யாவின் தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொசாம்பிக் மற்றும் காபோன் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். ஐநாவில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் 15 நாடுகளில் 9 நாடுகளின் ஆதரவு […]

பொழுதுபோக்கு

லியோவுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை… இப்ப என்ன தெரியுமா?

  • October 17, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘லியோ’ திரைப்படத்தின் ஒருவார வசூலில் 75 சதவீதம் தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக […]

வாழ்வியல்

ஆழ்ந்த உறக்கத்துக்கு அவசியமான உணவுகள்!

  • October 17, 2023
  • 0 Comments

மனிதனுக்கு தினமும் போதுமான உறக்கம் தேவை. உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கும், மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நல்ல தூக்கம் அவசியம். மெலடோனின் என்பது இயற்கையாக நமது உடலில் சுரக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது உறக்கத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரவில் சரியாகத் தூக்கம் வராமல் சிரமப்படுவோர், மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச்செய்யும் சில உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் நிம்மதியாக உறங்க முடியும். இனி, மெலடோனின் சுரப்பை தூண்டச் செய்யும் சில உணவு வகைகளை இந்தப் […]

இலங்கை

இலங்கையில் பெண் ஒருவருக்கு 6 ஆண் குழந்தைகள்!

  • October 17, 2023
  • 0 Comments

இலங்கை பெண் ஒருவர் ஆறு ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார். ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார். இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு குழந்தைகள் பிறந்தன. அன்று மூன்று ஆண் […]

இலங்கை

காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் பணி ஆரம்பம்

  • October 17, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள் வசித்து வருவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். இதில் ஒரு குடும்பம் 23 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவர்கள், பாதுகாப்பாக […]

செய்தி

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை – இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு

  • October 17, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் மைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுடியாது எனவும் திட்டவட்டமாக இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவரத்துக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அபராதச் சீட்டை பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • October 17, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் வேக வரம்பை மீறியதற்காக நபர் ஒருவருக்கு 1.4 மில்லியன் டொலர் அபராதச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கொனர் கேட்டோ (Connor Cato) எனப்படும் அந்த ஆடவர் நபர் எழுத்துப் பிழையாக இருக்கும் என்று முதலில் நினைத்தார். உடனடியாக நீதிமன்றத்தையும் தொடர்புகொண்டார். ஆனால் அவர் அபராதத்தைச் செலுத்தவேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு நேரில் வரவேண்டும் என்று கூறப்பட்டது. பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது, 1.4 மில்லியன் டொலர் என்பது சீட்டில் தானாகவே வரக்கூடிய தொகை […]