இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி;பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கேள்வி

  • October 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி […]

ஐரோப்பா

பிரான்சில் குளிர்கால நேரமாற்றம்

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் அக்டோபர் மாதத்தின் கடைசி சனி ஞாயிறு இரவில் நேரமாற்றம் இடம்பெற்று வருகிறது. அதன்படி இன்று இரவு அல்லது ஞாயிறு அதிகாலை நேரம் மாற்றம் இடம் பெற உள்ளது. இந்த நடைமுறை 1916 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் தேசத்தில் கடைப்பிடிக்க தொடங்கப்பட்டது. பின்னர் 1944ம் ஆண்டு இந்த நடைமுறை கைவிடப்பட்டது, மீண்டும் 1975 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பிரான்சில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று நல்லிரவைத் தாண்டி நாளை. 29/10 அதிகாலை […]

இலங்கை

மூத்த பாடகர் சுனில் சிறிவர்தன காலமானார்

பழம்பெரும் பாடகர் சுனில் சிறிவர்தன தனது 82வது வயதில் இன்று (ஒக்டோபர் 28) காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி, பாடகர் மதுமாதவ அரவிந்த மற்றும் நடிகர் தனஞ்சய சிறிவர்தன ஆகியோரின் தந்தையான சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இலங்கை

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி!

  • October 28, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான  பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில்  குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில்  இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த   35 மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட […]

இலங்கை

மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை

மஸ்கெலியா பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (26) மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். நல்லதண்ணி, லக்ஷபான மற்றும் வாழைமலை பிரதேசங்களில் வசிக்கும் மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு […]

உலகம்

மாசசூசெட்ஸில் உள்ள வொர்செஸ்டர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • October 28, 2023
  • 0 Comments

மாசசூசெட்ஸில் உள்ள வொர்செஸ்டர் ஸ்டேட் யுனிவர்சிட்டி, விடுதித் தொகுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்குமிடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகம் துரிதமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பான, உட்புற இடங்களில் தஞ்சம் அடையவும், ஜன்னல்களிலிருந்து விலகி இருக்கவும், வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா… கொளுத்திப் போட்ட பிரபலம்

  • October 28, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ, கடந்த 19ம் தேதி வெளியானது. லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படம், இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதேநேரம் படம் எதிர்பார்த்த அளவில் இல்லையென்றும் நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில், லியோ வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார். விஜய்யின் லியோ ஏற்கனவே அறிவித்திருந்த படி அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. விஜய் – லோகேஷ் […]

ஐரோப்பா

ஹங்கேரி பிரதமருக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

  • October 28, 2023
  • 0 Comments

ஹங்கேரி நாட்டின் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்ததற்கு, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஹங்கேரி நாட்டின் பிரதமரான Viktor Orbán, சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யாவுக்கெதிராக தடைகள் விதித்தன. அந்த நிலையிலும், போரை நிறுத்துவதற்காக பலமுறை புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.ஆனால், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் விக்ரம் லேண்டர் உருவாக்கிய மெகா பள்ளம்… தூக்கி வீசப்பட்ட 2.06 டன் துகள்கள்!

  • October 28, 2023
  • 0 Comments

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ள விவரம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. பூமியிலிருந்து விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி அதை பத்திரமாக நிலவில் தரையிறங்க வைத்து, அங்கு ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் நிலவிற்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் […]

ஐரோப்பா

வாக்கு எண்ணுதலில் ஏற்பட்ட தவறு குறித்து வெளிநாட்டு விசாரணை

சுவிட்சர்லாந்தில், வாக்கு எண்ணுதல் தொடர்பில் ஏற்பட்ட தவறு குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பினால் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி வெற்றி பெற்று உள்ளது. எனினும், சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் வாக்கு எண்ணுதலில் தவறிழைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு மாத கால […]