இலங்கை

2025 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வரி : இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

  • October 29, 2023
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை

ஜானக ரத்நாயக்கவிடம் கப்பம் கோரிய மூவர் கைது!

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவிடம் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

பிரித்தானிய கடிகாரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நேர மாற்றம்

  • October 29, 2023
  • 0 Comments

அக்டோபர் 29, 2023, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 2 மணிக்கு, பிரித்தானியர்கள் தங்களுடைய கடிகாரங்களை ஒரு மணிநேரம் பின்னோக்கி வைப்பார்கள், இது பிரிட்டிஷ் கோடைகால நேரம் (BST) அதிகாரப்பூர்வமாக முடிவடையும் மற்றும் கிரீன்விச் சராசரி நேரத்திற்கு (GMT) திரும்புவதைக் குறிக்கிறது. கடிகாரங்கள் 1 மணிநேரம் முன்னால் இருக்கும் காலம் பிரிட்டிஷ் கோடை நேரம் (BST) என்று அழைக்கப்படுகிறது. மாலையில் பகல் வெளிச்சம் அதிகமாகவும், காலையில் குறைவாகவும் இருக்கும் (சில நேரங்களில் பகல் சேமிப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது). கடிகாரங்கள் […]

மத்திய கிழக்கு

காசாவில் இணைய சேவைகள் வழமைக்கு திரும்பின!

  • October 29, 2023
  • 0 Comments

காசா பகுதியில் உடைந்த தொலைபேசிகள், இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தகவல் தொடர்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டது, இதன் காரணமாக இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள் வெளியுலக உறவுகளை இழந்திருந்தனர். எவ்வாறாயினும், காஸா பகுதியின் பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபை நாளை (30.10) மீண்டும் கூடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

“என்ன அழகு எத்தனை அழகு” இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா- உமாபதி புகைப்படங்கள்….

  • October 29, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். எனவே நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் […]

மத்திய கிழக்கு

காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்… ஹமாஸின் வான் படை கமாண்டர் கொலை

  • October 29, 2023
  • 0 Comments

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார். ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7ம் திகதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக […]

இலங்கை

எரிபொருளால் பாரிய இலாபத்தை ஈட்டும் அரசாங்கம் : மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!

  • October 29, 2023
  • 0 Comments

எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருந்தாலும், ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என பொறுப்பான […]

பொழுதுபோக்கு

6 வருட காத்திருப்புக்கு பின் முதல் அப்டேட்டை வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு

  • October 29, 2023
  • 0 Comments

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதையடுத்து அப்படத்தி சுமார் ஓராண்டு கடின உழைப்புக்கு பின்னர் வெற்றிகரமாக ஷூட்டிங்கை […]

செய்தி

மூளையும் மனமும் இளமையாக இருக்க செய்ய வேண்டியவை

  • October 29, 2023
  • 0 Comments

முதுமை நம் கதவை தட்டாமல் இருக்க உடல் ஆரோக்கியதோடு மன ஆரோக்கியமும் முக்கியம். அதற்கு நமது மூளையும் மனமும் என்றும் இளமையாக இருக்க வேண்டும். சுய அக்கறை என்பது நல்ல மன ஆரோக்கியத்திற்கு இது அவசியம். உங்கள் மனதையும், உடலையும், ஆன்மாவையும் வளர்க்க, உங்களுக்கு பிடித்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள். மனமும் உடலும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான உடல் பயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். உடற்பயிற்சி […]

பொழுதுபோக்கு

“பூ” நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலா? தனுஷ் சொன்ன கிசுகிசு வைரலாகிறது

  • October 29, 2023
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனுஷ் பழைய பேட்டி ஒன்றி சொன்ன கிசுகிசு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல் தான். அப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார். சிவகார்த்திகேயன், அண்மையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். அதன்படி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறி பேட்டி அளித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், டி.இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனக் கூற, […]