இலங்கை

வங்காள தேசத்தில் நீடித்துவரும் போராட்டம் : பொலிஸ் அதிகாரி உயிரழப்பு!

  • October 29, 2023
  • 0 Comments

காபந்து அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தக் கோரி வங்காளதேச எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில்  பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் சமீபத்தில் போராட்டங்களை தொடங்கின. அதன்படி இன்று (29.10) இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கலைக்க […]

ஆசியா

சிங்கப்பூரில் மாணவி துஷ்பிரயோக வழக்கில் இந்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை!

  • October 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்த இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் துப்பரவு பணியாளராக வேலைப் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாதையில் நடந்துச் சென்ற மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சின்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.இக் குற்றச் செயலுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனையையும் 12 கசையடிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் பகிரங்கமாக கிஸ் அடித்துகொண்ட ஜோடி – வைரலாகும் வீடியோ

  • October 29, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உருவான காதல் ஜோடிகள் ஏராளம். முதல் சீசனில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசன் வரை காதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சீசனிலும் ஒரு லவ் டிராக் ஓடுவதை காண முடிகிறது. முதல் சீசனில் ஓவியா – ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா – மகத், மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா, நான்காவது சீசனில் ஷிவானி – பாலாஜி, ஐந்தாவது சீசனில் அமீர் […]

உலகம்

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு G7 அமைச்சர்கள் கண்டனம்

G7யை சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் ஜப்பானின் ஒசாகாவில் சந்தித்த பின்னர் உக்ரைனில் ரஷ்யாவின் போர் பற்றிய தங்கள் விமர்சனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன்ர். ஒரு கூட்டறிக்கையில், அமைச்சர்கள் “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான, தூண்டப்படாத, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை” கண்டித்துள்ளனர். உலகின் முக்கிய தொழில்மயமான நாடுகளின் அதிகாரிகள், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து “ஒருதலைப்பட்சமாக” வெளியேறும் மாஸ்கோவின் முடிவோடு, உக்ரேனின் தானிய ஏற்றுமதி உள்கட்டமைப்பை ரஷ்யா இலக்கு வைத்ததையும் ” கண்டித்துள்ளனர்.

இலங்கை

திருகோணமலையில் நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் பலி!

  • October 29, 2023
  • 0 Comments

திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சனுக பாசன (14) எனவும் தெரிய வருகின்றது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது தாய் உயிரிழந்துள்ளதாகவும் தந்தை பிள்ளைகளை விட்டுச்சென்று வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் குறித்த சிறுவன் தனது மாமாவின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் வேளாண்மை செய்வதற்காக நீர் தொட்டியில் நெல் போடப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த போது விழுந்துள்ளதாகவும் தெரிய […]

இலங்கை

டஸ்கர் அக்போ யானை மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களிலிருந்து முன்னர் மீண்டு வந்த போதிலும், அக்போ எனப்படும் யானை மீண்டும் ஒருமுறை சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிப்பனை வண்ணமடுவ குளத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத ஒருவரால் குறித்த மிருகம் சுடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.சி. சூரியபண்டார தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவ நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இலங்கையில் காடுகளில் எஞ்சியிருக்கும் சில ராட்சத யானைகளில் ஒன்றாக அக்போ உள்ளது. ஏறக்குறைய 40 வயது […]

ஆசியா

கராச்சி – பங்களாவில் ரகசிய பார்ட்டி… பள்ளி மாணவர்கள் கைது ;வைரல் வீடியோ!

  • October 29, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இரவு பார்ட்டி நடந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்களா ஒன்றில் பார்ட்டி நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி கிராமர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பார்ட்டியில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. பார்ட்டியை நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதியும் பெறவில்லை. பங்களாவில் காவல்துறை ரெய்டு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக […]

உலகம்

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி காலாமானர்‘!

  • October 29, 2023
  • 0 Comments

அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் இன்று (29.10) செய்தி வெளியிட்டுள்ளன. 54 வயதான பெர்ரி, தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் உள்ள சூடான தொட்டியில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்ரி 90 களில் உலகப் புகழ்பெற்ற பிரபலமான நடிகரானார்.  சாண்ட்லராக நடித்த நண்பர்கள் தொடர் உலகம் முழுவதும் அவரை அறிய செய்தது. பெர்ரி வலி நிவாரணி மற்றும் மதுவுக்கு அடிமையானார் என்றும்,  அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த போதைக்கும் அவரது […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 37 இந்திய மீனவர்கள் கைது!

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் நேற்றும் (28.10) இன்றும் (29.10)  அத்துமீறி மீன்பிடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,  யாழ்ப்பாணம், டெல்ப் தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த  மீனவர்கள் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை

2025 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வரி : இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

  • October 29, 2023
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.