பொழுதுபோக்கு

ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கும் அம்மணியால் மாஸ் ஹீரோவின் வீட்டில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை…

  • October 30, 2023
  • 0 Comments

மாஸ் ஹீரோவின் வீட்டு பஞ்சாயத்து தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மனைவியுடன் பிரச்சனை, பிள்ளைகள் பேசுவதில்லை என செய்திகள் ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள படமும் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் இப்போது ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கும் அம்மணி தான். பல வருடங்களுக்கு முன்பே மாஸ் ஹீரோவுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டு ஒரு நெருக்கத்தை இவர் உருவாக்கி இருந்தார். அது […]

உலகம்

ஐரோப்பாவில் இடைவிடாத இனவெறி அதிகரிப்பு : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஐரோப்பாவில் ‘பரவலான மற்றும் இடைவிடாத’ இனவெறி அதிகரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமைகள் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது பள்ளிகள் முதல் வேலைச் சந்தை, வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் வரை ஒவ்வொரு வாழ்க்கை முறையிலும், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமைகள் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியில் மிக மோசமான முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் , போலந்து, போர்ச்சுகல், […]

இலங்கை

வவுனியாவில் பாலத்திற்குள் விழுந்த சொகுசு கார் விபத்து!

  • October 30, 2023
  • 0 Comments

வவுனியா – ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து இன்று (30.10) விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அதேநேரம் பாலத்திற்குள் விழுந்த […]

இலங்கை

இலங்கையில் அலுவலக ரயில் சேவைகள் இரத்து!

  • October 30, 2023
  • 0 Comments

இன்றைய தினம் (30.10)  பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை சுமார் 12 மணிக்கு அலுவலக ரயில் மற்றும் பிற்பகல் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை

உறங்கிக்கொண்டிருந்த யாசகரை பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது!

  • October 30, 2023
  • 0 Comments

உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார். மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார். விபரீதத்தை […]

இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

நவம்பர் 1 ஆம் திகதி புதன்கிழமை ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அன்றைய தினம் குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

வட அமெரிக்கா

மெக்சிகோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளி ; பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு ‘

  • October 30, 2023
  • 0 Comments

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ‘ஓடிஸ்’ சூறாவளி சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. அப்போது அடித்த பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமானவை சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆன கணவர்.. ரச்சிதா போட்ட எமோஷனல் பதிவு…

  • October 30, 2023
  • 0 Comments

பிக்பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் தினேஷ் என்ட்ரி ஆகியதை அடுத்து ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு […]

பொழுதுபோக்கு

கைதி – 2, விக்ரம் – 2 வரிசையில் இணைந்தது “லியோ 2”… லோகேஷ் உறுதி

  • October 30, 2023
  • 0 Comments

லோகேஷ் – விஜய் கூட்டணியின் முதல் LCU படமாக வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் LCU ஜானரில் உருவானது குறித்தும், விஜய் அதற்கு ஓக்கே சொன்னது பற்றியும் லோகேஷ் மனம் திறந்துள்ளார். மேலும், லியோ 2ம் பாகம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். லியோ படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் குறித்து நெகட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் வந்தன. குறிப்பாக லியோவில் LCU சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும், விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்சிங் […]

இலங்கை

வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு : தமிழர் பகுதியில் சோகம்!

  • October 30, 2023
  • 0 Comments

கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி இரவு வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.