இந்தியா

புருவத்தை திருத்தம் செய்த மனைவி… போனில் தலாக் சொன்ன கணவன்!

  • November 2, 2023
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில் புருவத்தை திருத்திய இளம்பெண்ணுக்கு அவரது கணவர் போனில் தலாக் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 2022ம் ஆண்டு பிரயக்ராஜைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்த இளம்பெண் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அக்.4ம் திகதி கான்பூரில் உள்ள […]

இலங்கை

கொழுப்பில் நடைபெற்ற இலங்கைஇந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை

  • November 2, 2023
  • 0 Comments

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. இதில் நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு ஈரான் வலியுறுத்தல்

  • November 2, 2023
  • 0 Comments

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அவர் தெரிவித்தார். காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. “காசாவில் நடந்து வரும் இன அழிப்பை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் விரைந்து வலியுறுத்த வேண்டும். இஸ்லாமிய நாடுகள், சியோனிச ஆட்சி நடக்கும் இஸ்ரேலுடன் […]

பொழுதுபோக்கு

நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்

  • November 2, 2023
  • 0 Comments

மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலையா எப்படி தனது தனித்துவமான உடல்மொழி, குரல் மொழி ஆகியவற்றை கொண்டிருந்தாரோ அதேபோல் ஜூனியர் பாலையாவும் கொண்டிருந்தார். ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான […]

பொழுதுபோக்கு

இத்தாலியில் பிரம்மாண்ட திருமணம் – படையெடுத்த தெலுங்கு நடிகர் கூட்டம்…

  • November 2, 2023
  • 0 Comments

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் மண மக்கள் அழகாக தரையில் அமர்ந்துக் கொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் திருமண புகைப்படங்கள் தற்போது ஷேர் […]

உலகம் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இடிந்து விழுந்த கட்டிடங்கள்

  • November 2, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, திமோர்-லெஸ்டேவில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. எப்படியிருப்பினும் இதுவரையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

செய்தி

காஸா பகுதியில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

  • November 2, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் 17 இலங்கையர்கள் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். இதற்குத் தேவையான பணிகளை எகிப்து […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் – சிக்கிய பெண்

  • November 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் உணவை தயாரித்த பெண் கிழக்கு விக்டோரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று, கிப்ஸ்லாந்தில் அவர் தயாரித்த மதிய உணவை உட்கொண்ட 03 பேர் இறந்தனர். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய பெண்ணின் வீட்டிலும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் சோதனையிட்டனர். எனினும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இங்கு 66 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரி, 70 வயதுடைய பெண் மற்றும் […]

வாழ்வியல்

நம் கண்களை பராமரிக்க இலகுவான வழிமுறைகள்!

  • November 2, 2023
  • 0 Comments

வேகமான வாழ்க்கை முறையில் உடலில் பல பாகங்களை குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கண் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதில் பெரிய பிரச்சனையை வந்தால் மட்டுமே அதை கண்டு கொள்கிறோம். எனவே இந்தப் பகுதியில் கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் கோளாறுகளை குறைக்கக்கூடிய உணவு முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம். இன்றைய நவீன காலத்தில் கண்களுக்கு மிக அதிகமான வேலை கொடுக்கிறோம். குறிப்பாக செல்போன் பார்ப்பது ,லேப்டாப், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் […]

இலங்கை

இலங்கை முழுவதும் இன்று மருத்துவ சேவைகள் முடங்கும் அபாயம்

  • November 2, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் […]