ஐரோப்பா

போரை உடனடியாக நிறுத்துங்கள் ; 187m உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஸ்பைடர் மேன்

  • November 7, 2023
  • 0 Comments

காஸா மீதான இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்தக்கோரி பிரான்ஸில் 187 மீட்டர் உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள். சிறுவர்கள் உள்பட சுமார் 250 […]

பொழுதுபோக்கு

ஒரு மணி நேரத்தில் மொத்த பணியையும் நிறைவு செய்தார் விக்ரம்

  • November 7, 2023
  • 0 Comments

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ம் தேதி அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஏற்கனவே இப்படத்தில் விக்ரம்-க்கு குறைவான வசனங்கள் தான் உள்ளது என அவரே தெரிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இதன் டப்பிங் பணிகளில் விக்ரம் ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களுக்கு கடுமையாகும் சட்டம்

  • November 7, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் – குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் இளைஞர்களின் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில் இளைஞர்களுக்கான ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கத்தி/துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை விற்பனை செய்வதற்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும். விதிமுறைகளை மீறும் கொள்முதல் மற்றும் விற்பனை தரப்பினருக்கு அபராதம் விதிக்கப்படும். போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பொருட்களை வாங்க […]

பொழுதுபோக்கு

உலக நாயகனுக்கு பிறந்தநாள்… “Thug life” கொடுத்த ப்ரைஸ்….

  • November 7, 2023
  • 0 Comments

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’ . இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது. இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. நடிகர் கமல்ஹாசன் இன்று […]

இலங்கை

இலங்கையில் காதலை மறுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 7, 2023
  • 0 Comments

பெண் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை மறுத்த காரணத்திற்காக தனது உறவினான பெண் ஒருவரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார். இவருடன் காலி பிரதேசத்தில் இருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் சந்தேக நபரும் பயணித்துள்ளார். குறித்த பஸ் யுவதியின் திணைக்களத்திற்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

ராஷ்மிகா மந்தனாவின் சர்ச்சை வீடியோ – ஆபத்தாக மாறும் Deepfake

  • November 7, 2023
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் நுழைவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆரம்பத்தில் உண்மையானதாகத் தோன்றுவது, உண்மையில், நடிகையின் ‘Deepfake’ ஆகும். அசல் வீடியோவில் ஜாரா பட்டேல் என்ற பிரிட்டிஷ் இந்தியப் பெண் இடம்பெற்றுள்ளார், அதற்குப் பதிலாக ராஷ்மிகா மந்தனாவின் முகம் Deepfake மூலம் மார்பிங் செய்யப்பட்டது. Deepfake தொழில்நுட்பம் என்றால் என்ன? Deepfake என்பது 21 ஆம் நூற்றாண்டின் போட்டோஷாப் போன்ற மென்பொருளாகும். Deep learning எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இது செய்யப்படுகிறது, […]

பொழுதுபோக்கு

இலங்கையில் “லியோ” தோற்றது.. “ஜெய்லர்” வென்றது..

  • November 7, 2023
  • 0 Comments

வசூலில் பட்டையை கிளப்பிய  லியோ இதுவரை உலக அளவில் ரூ. 570 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ நிகழ்த்தியுள்ளது. ஆனால், ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் இதுவரை முறியடிக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது இலங்கையிலும் ஜெயிலர் படத்தின் வசூல் முன் லியோ படத்தின் வசூல் தோல்வியை சந்தித்துள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இலங்கையில் ரூ. 20.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், லியோ இதுவரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் […]

வாழ்வியல்

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா? வெளியான முக்கிய தகவல்

  • November 7, 2023
  • 0 Comments

மனிதனுக்கு தேவையான அனைத்து உப்புகளும் நாம் அருந்தும் நீரில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்.. உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீராக நமது சிறுநீரகத்திலிருந்து வெளியேறுகிறது. அதிகமாக நாம் தண்ணீர் குடிக்கும் போது ரத்த நாளத்தில் தண்ணீர் அதிகம் சேர வாய்ப்புள்ளது. உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. தண்ணீர் எப்போது அதிகம் குடிக்க வேண்டும்? […]

செய்தி

மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி – பாகிஸ்தானில் அதிர்ச்சி

  • November 7, 2023
  • 0 Comments

பாகிஸ்தான், காராச்சியில் மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உள்ளதனை சிந்து சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமீபாவால் கராச்சியில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமீபா உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து, மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்று நோய் ஏற்படுத்தி […]