வட அமெரிக்கா

நியூயார்க் நகர தெருக்களில் வழிந்தோடிய பச்சை நிற நீரால் மக்கள் குழப்பம்

  • November 7, 2023
  • 0 Comments

நியூயார்க் நகர தெருக்களில் திடீரென பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சில பயனர்கள், […]

இலங்கை

நயினாதீவுக்கு விஜயம் செய்த சீன தூதுக் குழுவினர்!

  • November 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று (07.10) நயினாதீவுக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்விஜயத்தின்போது  சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும்,  நயினாதீவு மக்களுக்கு வழங்கி வைத்தனர். இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும் சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளன. நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்

வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் உள்ள மரபுசார் ஆயுதப் படைகள் (CFE) உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் தனது விருப்பத்தை அறிவித்த பின்னர், செவ்வாய் நள்ளிரவில் ரஷ்யா முறையாக முக்கிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதை “வரலாறு” என்று அழைத்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

இலங்கை

சீரற்ற வானிலை: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆமர் வீதி சந்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நெலும்தெனிய, உடுகும்புர பகுதியில் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே வீழ்ந்துள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஒரு பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – […]

இலங்கை

இலங்கையின் பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

  • November 7, 2023
  • 0 Comments

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (07.11) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியின் 179 கிலோமீற்றர் தொலைவில் பாரிய மண் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதேவேளை, ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா வத்தை பகுதியில் இன்று (07) பிற்பகல் பிரதான வீதியில் மண் மற்றும் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக […]

இலங்கை

இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டு ஆரம்பம்!

  • November 7, 2023
  • 0 Comments

இலங்கையில் முதன்முதலில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ கம்பனி (பிரைவேட்) லிமிடெட் ஆரம்பித்துள்ளது. அப்சீலிங் சாகச விளையாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு டிசம்பர் மாத இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரிமாத தொடக்கத்தில் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் சாகச விளையாட்டில் ஈடுபட தாமரை கோபுரத்திற்கு வருகை தருமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு: இராணுவத் தலைவர் ஜலுஷ்னியின் உதவியாளர் உயிரிழப்பு

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு வெடித்து உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி ஜலுஸ்னியின் நெருங்கிய உதவியாளர் உயிரிழந்துள்ளார். பிறந்த நாள் அன்று தனது சகாக்களிடமிருந்து வந்த பரிசுகளை தனது மகனுடன் அவற்றைத் திறந்து கொண்டிருந்தபோது, ​​கைக்குண்டு வெடித்து.உரியிழந்துள்ளார். குண்டுவெடிப்பு ஒரு “துரதிர்ஷ்டவசமான விபத்து” என்று விவரிக்கப்பட்டுள்ளது மற்றும் உத்தியோகபூர்வ விசாரணையின் முடிவுக்காக காத்திருக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கியேவின் மேற்கு புறநகரில் உள்ள சாய்கியில் உள்ள குடும்ப குடியிருப்பில் வெடிப்பு “வெடிமருந்துகளை கவனக்குறைவாகக் கையாண்டதன் […]

இலங்கை

இலங்கை பிரஜை உள்ளிட்ட நால்வர் இந்தியாவில் கைது!

  • November 7, 2023
  • 0 Comments

ஒருகோடி ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் அதிகாரிகள் வேன் ஒன்றுக்குள் இருந்த குறித்த நால்வரை விசாரணை செய்தபோது குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது குறித்த வேனை சோதனை செய்த பொலிஸார் சட்டவிரோத பணம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடிரூபாய் இந்திய பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என […]

பொழுதுபோக்கு

கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த முக்கிய சந்திப்பு

  • November 7, 2023
  • 0 Comments

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன்.  வித்தியாசமான படங்கள் நடித்து தனித்துவமான நடிகராக விளங்கினார். அவர் படங்களின் மூலம் சினிமா மீது ஆசைப்பட்டு இந்த துறையில் நுழைந்த கலைஞர்களும் பலர் உள்ளார்கள். இன்று கமல்ஹாசன் அவர்கள் தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா […]

இலங்கை

நாட்டின் பழமையான தபால் கட்டிடத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் முடிவு

நுவரெலியா தபால் அலுவலகத்தை ஹோட்டல் திட்டமாக தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். செயலிழந்த மற்றும் பயன்படுத்தப்படாத கட்டடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக […]