இலங்கை

வவுனியா, தரணிகுளத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • November 15, 2023
  • 0 Comments

வவுனியா, தரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், 20-25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என  நம்பப்படுகிறது, மேலும் அவரது தலைமுடி மிகவும் நீளமாக வளர்ந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். முகம் அடையாளம் தெரியாத வகையில் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு […]

இலங்கை

இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்றகடிக்க வேண்டும் – நாமல்!

  • November 15, 2023
  • 0 Comments

ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். ஆனால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

ஆசியா

பொருளாதார சரிவில் இருந்து மீள இராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்கும் பாகிஸ்தான்

  • November 15, 2023
  • 0 Comments

பொருளாதார சரிவின் காரணமாக அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பாகிஸ்தான் தேசம், அதிலிருந்து மீள்வதற்காக தேசத்தின் பாதுகாப்புக்கான ஆயுதங்களின் கையிருப்பை கரைத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போர் காரணமாக கடும் ஆயுத பற்றாக்குறைக்கு ஆளாகி இருக்கும் உக்ரைன், பல்வேறு நாடுகளிடம் இருந்தும் உதவியாகவும், விலைக்குமாக ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வசமிருந்து அமெரிக்க டொலர் மதிப்பில் 364 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் விலை கொடுத்து வாங்கியதாக சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. பாகிஸ்தான் […]

இலங்கை

வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் பலி

  • November 15, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவரே சம்பவத்தில் […]

இலங்கை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

  • November 15, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் 03 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள்தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

இந்தியா விளையாடுவதை நேரில் பார்க்கச் சென்றார் சூப்பர் ஸ்டார்

  • November 15, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினி மும்பை சென்றுள்ளார். அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார். ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக […]

மத்திய கிழக்கு

முதல் முறையாக காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படைகள்

  • November 15, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தாக்கி இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைவது இதுவே முதல் முறை. அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் இயங்கி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. அதன்படி ஹமாஸ் போராளிகளை […]

செய்தி

கடினமான மாதங்களை சந்திக்கவுள்ள இலங்கை மக்கள்!

  • November 15, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அறிவிக்கும் கூட்டம் நேற்று(14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என குறிப்பிட்டார். “2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களும் கடினமாக இருக்கும். இது படிப்படியாக மேம்படும். […]

செய்தி வாழ்வியல்

நீண்ட ஆயுளுக்கு செய்ய வேண்டிய 4 விடயங்கள்

  • November 15, 2023
  • 0 Comments

நம்மில் பலருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நாட்கள் வாழ என்ன செய்ய வேண்டும் என்ற ரகசியமும் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக சில சிம்பிளான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. காலை பழக்கங்கள்.. உங்கள் நாள் எவ்வாறு செல்கிறது என்பதை உங்கள் காலைப் பழக்கங்களை வைத்து கணிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு எழுந்தவுடன் மொபைலைச் பார்ப்பதே அவர்கள் அந்த நாளில் செய்யும் […]

பொழுதுபோக்கு

ஜோதிகா தான் வேண்டும்…. அசினை அசால்ட்டாக ஒதுக்கிய சூர்யா…..

  • November 15, 2023
  • 0 Comments

நடிகை அசினை சூர்யா ஒதுக்கிய சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமான அசினுக்கு அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை […]