பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்? வெளியான சூப்பர் அபிடேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்திற்கு படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மேலும் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில், நாட்டில் அதிகம் தேடப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தை இயக்குவார் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

தலைவர் 170-ல் ரஜினிக்கு வேற வில்லனே கிடைக்கலயா? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்….

  • August 3, 2023
  • 0 Comments

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கிறார். அதில், தசெ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதேபோல், ரஜினிக்கு வில்லனாக டோலிவுட் முன்னணி ஹீரோ நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கிய ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என இரண்டு படங்களை முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதில் நெல்சனின் ஜெயிலர் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. […]

உலகம்

ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளும் பிரான்ஸ்?

ரஷ்யா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இன்னும் உள்ளது, ஆனால் உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவின் ஏற்றுமதி வேகம் குறைந்துள்ளது. உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவின் இடத்தை பிரான்ஸ் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பாரிஸிலிருந்து இந்தியாவுக்கான ஆயுத இறக்குமதி ஓரளவுக்கு அதற்கு உதவுகின்றன. 2018 மற்றும் 2022 க்கு இடையில், உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் பிரான்சின் பங்கு 2018 முதல் 2022 வரை 7.1 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் […]

இலங்கை

மல்லாவியில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

  • August 3, 2023
  • 0 Comments

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை

யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய தகவல்! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

யாழ். நகரின் முச்சக்கர வண்டி நிலையத்திலிருந்து கட்டண மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளை அகற்றுவதற்கு யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ். நகரில் இன்று (03) வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யாழ். மாவட்டத்தில் வாடகைக்கு விடப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு போதிய மீற்றர் இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டண அளவீட்டின் […]

இலங்கை

கம்பளையில் மூதாட்டி துஷ்பிரயோகம்: மருமகன் கைது

  • August 3, 2023
  • 0 Comments

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த, வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சகோதரன் திருமணம் முடித்துள்ள பெண்ணின் தாயையே சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட குருந்துவத்தை பொலிஸார், நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மூதாட்டி திருமணமான தனது மகளுடன் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் வெளிநாட்டு இரணுவ வீரருக்கு நேர்ந்த துயரம்…

  • August 3, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியானார். செவ்வாய்க்கிழமையன்று, தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் அந்த ராணுவ வீரர் கவச வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. செமி ட்ரக் ஒன்று கவச வாகனத்தில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடன் பயணித்த மற்ற ராணுவ வீரர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளும் அலி சப்ரி

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட் 07, 2023 வரை ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, வெளியுறவு அமைச்சர் ஈரானிய ஜனாதிபதி டாக்டர் செயிட் இப்ராஹிம் ரைசியை மரியாதையுடன் சந்திக்கவும், ஈரான் வெளியுறவு […]

இந்தியா

8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி! கர்நாடகாவில் சம்பவம்

கர்நாடகாவில் செருகப்பட்ட டார்ச் சார்ஜர் வயரை கடித்ததால் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தது கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் செருகப்பட்டிருந்த டார்ச் சார்ஜர் வயரைக் கடித்த ஏழு மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வாரை சேர்ந்த கல்குட்கர் மற்றும் சஞ்சனா தம்பதியினரின் சானித்யா என்ற 8 மாத குழந்தையே உள்ளது. காலை 7 மணியளவில் சாநிதியை அவரது வீட்டில் பேபி வாக்கர் மீது ஏற்றியபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் […]

ஆஸ்திரேலியா

விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டர்; குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!

  • August 3, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் விழுந்துநொருங்கிய விமானப்படை ஹெலிக்கொப்டரில் பயணித்த படைதுறையினரின் மனித எச்சங்கள் குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்தின் வைட்சண்டேதீவில் விழுந்துநொருங்கிய ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களின் மனித எச்சங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.ஹெலிக்கொப்டரின் விமானியின் பகுதி உட்பட சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நீருக்கடியில் 40 மீற்றர் ஆழத்தில் இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் , சிதைவுகள் ஒருபேரழிவு அதிகவேகத்துடன் இடம்பெற்றதை வெளிப்படுத்துகின்றன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நிலத்துக்குஅடியில் செலுத்தப்பட்ட வாகனங்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளன எனவும் அவர் […]

You cannot copy content of this page

Skip to content