இலங்கை செய்தி

நடிகை குஷ்பு குறித்து கருத்து தெரிவித்த ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்

புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தினர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக இருந்த இசை நிகழ்வு ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காக தென்னிந்திய திரைப்பட நடிகை குஸ்பு அந்த நிகழ்வை நடத்தும் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் புலிகள் இயக்கத்தினரை பயங்கரவாதிகள் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டதாகவும் அதனை முன்னிலைப்படுத்தி தொகுப்பாளரான குஸ்வுவை இலங்கைக்கு வர அனுமதிக்க மாட்டோம் என சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரவவிட்தாகவும் அதனால் அந்த நிறுவனம் நடிகை குஸ்புவை மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்ற உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம்.

மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போயினர் எனவும் புலிகளை அழித்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் புலிகளை அழித்தமையால் நான் இன்று திருமலைக்கு சென்று கோணேஸ்வரப் பெருமானை சுதந்திரமாக தரிசிக்க முடிவதாகவும் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களுமே காரணம் என புகழாரமும் சூட்டியிருந்தார்.

இவ்வாறு புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாசிசவாதிகள் என்றும் மனித குலத்தக்கே கொரூரமானவர்கள் எனவும் தன்னை கூட்டமைப்பின் தலைவராக புலிகள் நியமிக்கவில்லை எனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்த இரா சம்பந்தனை திருமலை மாவட்ட மக்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்திருக்கின்றனர்.

அவ்வாறாயின் புலிகள் பயங்கரவாதிகள் என்ற சம்பந்தனின் கருத்தை திருகோணமலை மாவட்ட மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படுமா?
அதேபோல பிரபாகரன் வன்வலுவால் சாதிக்கமுடியாததை சட்டத்தரணி சுமந்திரன் மென்வலுவால் சாதிக்கின்றார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புழகாங்கிதம் அடைந்துவந்தனர்.

இதேவேளை மற்றுமொரு சட்டத்தரணியான சுகாஸ்திகா புலிகள் இயக்கம் ஒரு பாசிசவாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கருத்தச் சுதந்திரம் பேச்சுச் சதந்திரம் எழுத்துச் சுதந்திரம் ஒரு ஜனநாயகத்தில் வலுப்பெறவேண்டும் என்பதே எமது கருத்தாக உள்ளது.

எனவேதான் திரைப்பட நடிகை குஸ்புவின் வருகையை தடுப்பவர்கள் அல்லது சமூகவலைத் தளங்களில் விமர்சிப்பவர்கள் சம்பந்தனின் கருத்துக்கு என் பரிகாரம் கண்டார்கள்.

இதேவேளை புலிகளுக்கு மருந்து பொருட்களை அனுப்புவதற்கான மருந்து வகைகளின் பட்டியலை வைத்திருந்த குற்றச்சாட்டில் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் தமிழக அரசியல் முக்கியஸ்தர் பழ.கருப்பையா அவரை சந்தித்து நலன்விசாரித்தபோது மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் தான் கைது செய்யப்பட்ட விடயத்தை தெரிவித்தபோது பழ கருப்பையா அதை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அப்போது கருணாநிதிய முதலமைச்சராக இருந்த சமயம் மறவன்புலவு சச்சியானந்தத்தின் நண்பராக இருந்தாலும் புலிகள் விடயத்தில் அவரை சிறையிலிட்டார்.

அதை அறிந்த திரைப்பட இயககுநர் புகழேந்தி குறித்த சம்பவத்தை தளமாக கொண்டு காற்றுக்கென்ன வேலி என்றும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.

அந்தப்படத்தை தணிக்கைக்கழு தடுத்து திருத்தம் செய்து மீண்டும் வெளியிட முயன்றம் தமிழக அரசு தடை செய்தது. புலிகளுக்கு சார்பானது என்பதால் இவ்வாறான நெருக்கடிகளை தமிழக அரசு கொண்டுவந்தது.

இதைவிட அப்படம் புலிகளுக்கு சார்பானது என தெரிந்ததால் பல நடிகைகள் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அப்படத்தில் குஸ்புவே கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதேவேளை குறித்த படம் அன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பாக வன்னிப்பகுதியில் மிகவும் வெற்றிகரமாக திரையிடப்பட்டது

எதையும் எதிர்ப்பதற்காகவே எதிர்க்கவே வேண்டும் என எதிர்ப்பதில் ஒரு துன்பியல் சுகங்காண்பவர்கள் நடிகைகள் நடித்த படத்தை பார்காமல் விட்டார்களா?; இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களிடையே குஸ்பு வருவதா தடுப்பதா என வாக்டுகெடுப்பு நடத்தினால் தடுப்பவர்கள் தாமாகவே தலைமறைவாகி விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content