இலங்கை

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரிடமிருந்து கஞ்சா மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (25) அதிகாலை 1கிலோ 570கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இரணைப்பாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது அவரது வீட்டு அறையில் பொதி செய்யப்பட்ட வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கிலோ 570கிராம் கேரளா கஞ்சாவினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மீட்டுள்ளனர். இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 27வயதுடைய […]

இலங்கை

இலங்கை – தமிழர் பகுதியில் இளவயதில் நீதிபதியாக இருவர் தெரிவு : குவியும் பாராட்டு

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இள வயதில் நீதிபதியாக பதவியேற்கின்றார். வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் […]

இலங்கை

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யக்கோரி மனுத்தாக்கல்!

  • November 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் இன்றைய (25.11) தினம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை(27.11) காலை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் […]

உலகம்

இத்தாலியில் இதுவரை 106 பெண்கள் கொடூர கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு இத்தாலியில் இதுவரை 106 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது, அவர்களில் 55 பேர் காதலர்கள் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கியுலியா செச்செட்டினின் கொலையை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் நடைபெற்று வருகின்றன பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில், சனிக்கிழமை பல இத்தாலிய நகரங்களில் மேலும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கை

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்காவில் கைது!

  • November 25, 2023
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 731 இல் அவர்கள் புறப்பட வந்ததாக கூறப்படுகிறது. குறித்த இரு இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொரளை பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவர் அவர்கள் தொடர்பான ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் சீசன் 7; வெளியேறப் போவது இவர்கள்தான்

  • November 25, 2023
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த வாரம் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியாகியுள்ளது. தற்போது வரை உள்ளே வர உள்ள அந்த இரண்டு பழைய […]

இலங்கை

இலங்கையில் தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது!

  • November 25, 2023
  • 0 Comments

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

ஸ்பெயினில் பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு

ஸ்பெயினின் வயது வந்தோரில் 0.6 சதவீதம் பேர் பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாகக் கூறும் விசாரணையை மறுஆய்வு செய்யுமாறு கார்டினல் ஜுவான் ஜோஸ் ஒமெல்லா அழைப்பு விடுத்துள்ளார் அத்துடன் ஸ்பெயினின் கத்தோலிக்க திருச்சபை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒருமனதாக அங்கீகரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில், ஸ்பெயினின் முதல் சுயாதீன விசாரணை, 1940 முதல் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களால் சுமார் 39 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 200,000 க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக […]

இலங்கை

வெல்லாவெளி மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்விற்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டது!

  • November 25, 2023
  • 0 Comments

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி […]

இலங்கை

மட்டக்களப்பில் விஷப்பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பலி!

  • November 25, 2023
  • 0 Comments

ஆறு மாத குழந்தை ஒன்றை விஷப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது. தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டி இருக்கிறது. ஆனால் தாயோ நேற்று காலை மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்னேஷ் […]