மக்களை வீதிக்க இறக்க திட்டம் : பின்னணில் செயற்படவுள்ள ஊடகங்கள்!
மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினையை பிரதான பிரச்சினையாகக் கொண்டு மக்களை வீதிக்கு இறங்க வைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்திற்கு இரண்டு ஊடக நிறுவனங்கள் உதவிசெய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களைத் தூண்டிவிட்டு வீதிக்குக் கொண்டுவரும் வகையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுமாயின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் […]