பொழுதுபோக்கு

ரஜினிகாந்தின் இளைய மகள் இயக்கிய ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு சிறை

  • August 9, 2023
  • 0 Comments

செக் மோசடி வழக்கில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் நடித்த அனிமேஷன் திரைப்படம் ‘கோச்சடையான்’. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தை முரளி மனோகரின் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த படத்தின் தமிழக விநியோக உரிமை முரளி மனோகர் என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக […]

ஆசியா

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடை !

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது தண்டனைக்கு ஏற்ப தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) செவ்வாய்கிழமை ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. இம்ரான் அஹ்மத் கான் நியாசி ஐந்தாண்டு காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கானின் தொகுதி இப்போது காலியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தபோது வெளிநாட்டில் இருந்து பெற்ற சொத்துக்களை தவறாகக் கூறியதற்காக கான், சனிக்கிழமையன்று மூன்று ஆண்டுகள் […]

இலங்கை

நுவர்வோருக்கு விற்பனை செய்யும் கொத்தமல்லியில் இரசாயணங்கள் கலந்து விற்பனை!

  • August 9, 2023
  • 0 Comments

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகதூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக கொத்தமல்லியுடன் இரசாயனங்கள் கலந்திருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் அம்பாறை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குழு நேற்று (08.08) இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட் சீஷோர் வீதி பகுதியில் உள்ள களஞ்சியசாலையில், நுவர்வோர் […]

ஐரோப்பா

சீனாவில் வரலாறு காணாத மழை 33 பேர் பலி -18 பேர் மாயம்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, இதில் ஐந்து மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 18 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . நாட்டின் வடக்கின் பெரும்பகுதி தொடர்ந்து கனமழையால் அச்சுறுத்தலாக உள்ளது. சமீபத்திய வாரங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு சீனாவின் தலைநகரைத் தாக்கியது, உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது மற்றும் நகரின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. சீனாவின் தலைநகரைச் […]

செய்தி

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்!

  • August 9, 2023
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க,  கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “உண்மையில், இந்த நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சுமார் 3-5 ஆண்டுகள் ஆகும். பலரின் உடலில் இந்த அறிகுறிகள் […]

இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 09) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 314.94 ஆகவும் விற்பனை விலை ரூ.327.52 ஆகவும் பதிவாகியுள்ளது    

பொழுதுபோக்கு

“அந்த ஈகோ புடிச்சவனுக்கு மயி** கூட படம் பண்ண மாட்டேன்.. ” மீண்டும் மிஸ்கின்

  • August 9, 2023
  • 0 Comments

மிஸ்கின் மேடையில் அநாகரிகமாக பேசுவதை எப்போதுமே வழக்கமாகத்தான் வைத்திருக்கிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அடியே படத்தின் விழாவில் மிஷ்கின் பேசியது தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது துப்பறிவாளன் படத்தில் விஷால் மற்றும் மிஸ்கின் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கிய நிலையில் மிஸ்கின் மற்றும் விஷால் இடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் பொது வழியில் மிஸ்கின் விஷாலை பொறுக்கி […]

வட அமெரிக்கா

மேகன் தி ஸ்டாலியன் கொலை வழக்கில் கனேடிய ராப்பருக்கு 10 ஆண்டுகள் சிறை!

  • August 9, 2023
  • 0 Comments

மேகன் தி ஸ்டாலியன் கொலை வழக்கில் கனேடிய ராப் இசைக் கலைஞர் டோரி லேனஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் டோரி லேனஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில், சக கலைஞரான மேகன் தீ ஸ்டாலியனை சுட்டுக் கொன்றதற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராப்பரான Lanez என்றும் அழைக்கப்படும் டேஸ்டார் பீட்டர்சன், டிசம்பர் 2022-ல் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார். செமி-ஆட்டோமேட்டிக் […]

ஆசியா

இத்தாலியில் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழப்பு!

  • August 9, 2023
  • 0 Comments

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு படகு இத்தாலிக்கு செல்லும் வழியில் கடலில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இந்த வருடத்தில் இதுவரை 1,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை

ஜனாதிபதியிடம் சவால் விடுத்த ஸ்ரீதரன் எம்.பி

  • August 9, 2023
  • 0 Comments

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து எழுந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு சவால் […]

You cannot copy content of this page

Skip to content